azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 21 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 21 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
The Gopikas did not concern themselves with the question whether the Divine was attributeless or full of attributes. They preferred to worship the Divine in the form of Krishna and they wanted their forms to merge in the Divine. "Thereby we shall be formless," they declared. It is when we forget our form that we can merge in the Formless. The Divine cannot be experienced throughDhyana(meditation) orJapa(recitation); this is a delusion. These practices may give momentary peace of mind. To experience permanent joy, develop your Divine nature. For this, your environment must be congenial and have pure and Divine vibrations. It is not necessary to go to a forest to concentrate on the Divine Atma dwelling within your heart. The key to inner peace is within you and not outside. In the atmosphere of a sacred divine presence, you can promote your quest for peace more effectively. (Divine Discourse, 14 Aug 1990.)
கோபிகைகள், இறைவன் குணங்களற்றவனா அல்லது குணாதீதனா என்ற கேள்வியைப் பற்றி எல்லாம் கவலைப்படவே இல்லை.அவர்கள் இறைவனை ஸ்ரீ கிருஷ்ணரின் ரூபத்தில் வழிபடுவதையே விரும்பினார்கள் மேலும் அந்த ரூபத்துடன் தாங்களும் ஐக்கியம் ஆகி விட வேண்டும் எனவும் விரும்பினார்கள். '' அதன் மூலம் நாங்களும் ரூபம் அற்றவர்களாக ஆகி விடுவோம்'' என பறை சாற்றினார்கள்.நாம், நமது ரூபத்தை மறந்தால் தான் ரூபமற்ற இறைவனுடன் ஐக்கியம் ஆக முடியும். இறைவனை தியானத்தினாலோ அல்லது ஜபத்தினாலோ அனுபவிக்க முடியாது; அது ஒரு மாயை. இந்தப் பயிற்சிகள் ஒரு தாற்காலிகமான மனச் சாந்தியைத் தரலாம். நிரந்தரமான ஆனந்தத்தைப் பெற உங்களது தெய்வீக இயல்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.இதற்கு உங்களது சூழ்நிலை உகந்ததாகவும்,தூய்மையான மற்றும் தெய்வீக அதிர்வுகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். உங்களது இதயத்தில் உறையும் தெய்வீக ஆத்மாவைத் தியானிப்பதற்கு காட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.ஆத்ம சாந்திக்கான திறவு கோல் உங்களுள் இருக்கிறதே அன்றி வெளியில் இல்லை. தெய்வீகத்தின் புனிதமான சன்னிதிச் சூழ்நிலையில், சாந்திக்கான உங்களது தேடலை மேலும் திறம்பட நீங்கள் அபிவிருத்தி செய்து கொள்ள முடியும்.