azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 18 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 18 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
You should not pray to God seeking this favour or that. The reason is no one knows what immensely precious, Divine and magnificent treasures lie in the treasure-house of Divine Grace. You can never know what God intends or desires to give you, His devotee. Under such situations by asking for trivial and petty things, you are demeaning His Divine estate. Hence do not seek from God, nor desire, nor pray for petty trinkets. More precious and desirable than anything else is God's love. Hence Mother Meera sang: "Oh heart, drink the nectar of Divine love." If you must ask for anything from God, then pray to Him thus: "O Lord! Let me have You alone." Once you have secured the Lord, you can get anything you want. When you can get the precious Divine love, why crave for anything else? (Divine Discourse, 9 Oct 1989)
நீங்கள் இறைவனிடம் இது வேண்டும்,அது வேண்டும் எனப் பிரார்த்திக்கக் கூடாது.காரணம் என்னவென்றால், இறைவனது அருள் எனும் பொக்கிஷ இல்லத்தில் எப்படிப்பட்ட விலைமதிக்க முடியாத, தெய்வீகமான மற்றும் மகத்தான புதையல்கள் இருக்கின்றன என எவரும் அறியார்.இறைவன் தனது பக்தனான உங்களுக்கு, என்ன தர வேண்டும் அல்லது என்ன தர விரும்புகிறான் என்பதை நீங்கள் ஒரு போதும் அறிய மாட்டீர்கள்.இப்படிப் பட்ட சந்தர்ப்பங்களில், அற்பமான மற்றும் சில்லரைப் பொருட்களை வேண்டுவது, இறைவனது சாம்ராஜ்யத்தை அவமதிப்பது போலாகும். எனவே, இறைவனிடம் இருந்து எதையும் வேண்டாதீர்கள், விரும்பாதீர்கள் அல்லது அற்பமான பொருட்களை யாசிக்காதீர்கள்.எல்லாவற்றையும் விட விலைமதிப்பற்றதும், விரும்பத் தக்கதும் இறைவனது அன்பு ஒன்றே. எனவே தான் அன்னையான பக்த மீரா, '' ஏ இதயமே!தெய்வீக அன்பு எனும் அமிர்தத்தை அருந்துவாயாக !'' எனப் பாடினார்.நீங்கள் இறைவனிடம் ஏதாவது யாசித்துத் தான் ஆக வேண்டும் என்றால், '' இறைவா! உன்னை மட்டுமே எனக்குத் தா '' எனப் பிரார்த்தியுங்கள். இறைவனை நீங்கள் பெற்று விட்டால், உங்களுக்கு எது வேண்டுமோ அவை அனைத்தையும் நீங்கள் பெற முடியும். விலை மதிப்பற்ற தெய்வீக அன்பே உங்களுக்குக் கிடைக்கும் என்றால், வேறு எதற்காகவும் நீங்கள் ஏன் ஏங்க வேண்டும்?