azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 14 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 14 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

There is no need for a new religion or a new culture or a new philosophy, what is needed is only a pure heart. You should not give room for impurity or pollution in the heart. You can make your life sacred by following the golden rule: ‘Help ever; hurt never.’ Speak softly, sweetly and truthfully. There are two eyes to see different things, two ears to hear good and bad, there are two hands to do good and bad, but there is only one tongue to speak only the Truth. Embodiments of Divine Atma! Spend your life in cherishing sacred thoughts, listening to good things, speaking good words, and doing good deeds. If all of you adopt this path, happiness and prosperity will reign in the world. (Divine Discourse, 14 Apr 1993.)
ஒரு புதிய மதம் அல்லது கலாசாரம் அல்லது சிந்தாந்தம் ஆகியவற்றிற்கு அவசியமே இல்லை; தேவையானது ஒரு தூய இதயம் மட்டுமே.உங்கள் இதயத்தில் அசுத்தமோ அல்லது மாசோ பட நீங்கள் இடம் அளிக்கக் கூடாது. '' எப்போதும் உதவுங்கள், ஒரு போதும் தீங்கிழைக்காதீர்கள் '' என்ற பொன் மொழியைக் கடைப்பிடிப்பதன் மூலம் ,நீங்கள் உங்களது வாழ்க்கையைப் புனிதப் படுத்திக் கொள்ளலாம். இனிமையாகவும், இதமாகவும், உண்மையாகவும் பேசுங்கள். பலவற்றைக் காண இரண்டு கண்களும், நல்லவை மற்றும் தீயவற்றைக் கேட்க இரண்டு காதுகளும்,நல்லவற்றை மற்றும் தீயவற்றைச் செய்ய இரண்டு கைகளும் உள்ளன , <ஆனால் உண்மையை மட்டுமே பேசுவதற்கு ஒரே ஒரு நாக்கு மட்டும் உள்ளது. தெய்வீக ஆத்மஸ்வரூபங்களே!உங்களது வாழ்க்கையை புனிதமான எண்ணங்களைச் சிந்திப்பதிலும்,நல்லவற்றைக் கேட்பதிலும், நல்ல வார்த்தைகளைப் பேசுவதிலும், நற்செயல்களை ஆற்றுவதிலும் செலவிடுங்கள். நீங்கள் அனைவரும் இந்தப் பாதையைக் கடைப்பிடித்தால், சந்தோஷ, சௌகரியங்கள் இந்த உலகில் ஆட்சி புரியும்.
உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !