azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 13 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 13 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Sorrow springs from egoism, the feeling that you do not deserve to be treated so badly, and that you are left helpless. When egoism goes, sorrow disappears. Ignorance is just a mistake, a mistaken identity of the body as the Self! In fact, you must each one try to become ego-less, then the Lord will accept you as His very own flute. I encourage you to become His flute (theMurali), for then the Lord will come to you, pick you up, put you to His lips and breathe through you and, out of the hollowness of your heart due to the utter absence of egoism that you have developed, He will create captivating music for all of Creation to enjoy. Be straight without any will of your own, merge your will in the Will of God. Inhale only the breath of God. That is Divine Life! That is what I want you all to aspire and achieve. (Divine Discourse, Apr 1957, Venkatagiri.)
நீங்கள் ஆதரவின்றி இருப்பதாகவும்,உங்களை இவ்வளவு மோசமாக நடத்தப்படுவது சரியில்லை என்றும் எண்ணும் அஹங்காரத்திலிருந்தே, துயரம் ஊற்றெடுக்கின்றது. அஹங்காரம் அகன்று விட்டால் ,துயரம் மறைந்து விடும். அறியாமை வெறும் ஒரு தவறே;உடலையே ஆத்மாவாக இனம் காணும் தவறே அது ! உண்மையில் நீங்கள் ஒவ்வொருவரும் அஹங்காரம் அற்றவர்களாக ஆக முயல வேண்டும்; பின்னர் இறைவன் உங்களை தனக்கே சொந்தமான புல்லாங்குழலாக ஏற்றுக் கொள்வான். நீங்கள் அவனது புல்லாங்குழலாக ஆவதை நான் ஊக்குவிக்கிறேன்; ஏனெனில் பின்னர் இறைவன் உங்களிடம் வந்து, உங்களை எடுத்து, தனது உதடுகளில் பொருத்தி, உங்கள் மூலம் காற்றை ஊதி, நீங்கள் உருவாக்கி உள்ள அஹங்காரமே அற்ற இதயத்தின் வெற்றிடத்தின் மூலம்,இந்த சிருஷ்ட்டி அனைத்தும் மகிழக்கூடிய வசீகரமான இன்னிசையை உருவாக்கி விடுவான். உங்களுக்கென்று எந்த விருப்பமும் இன்றி நேராக உங்கள் விருப்பத்தை இறைவனது ஸங்கல்பத்தோடு ஒன்றரக் கலந்து விடுங்கள்.இறைவனை மட்டுமே சுவாசியுங்கள். அதுவே தெய்வீக வாழ்க்கை! இதையே நீங்கள் அனைவரும் நாடி, பெறவேண்டும் என நான் விரும்புகிறேன்.