azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 09 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 09 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
People want to get all they desire and get disillusioned or disappointed when their desires don’t materialise. You cannot always have pleasure. Pleasure is an interval between two periods of pain. They are like sunshine and shadow. Accept both with equanimity. Sandalwood gives more and more fragrance when it is subjected to more and more grinding. Sugarcane yields tasty juice when it is nicely crushed. Gold gets purer and refined when it is burnt and melted in fire. So also a true devotee will never falter in their love for God even when faced with troubles and obstacles in their life. God tests His devotees only to lift them up to a higher level in the spiritual ladder. True devotees lead sacred lives which gets sanctified when they face obstacles and problems with full faith in the Divine. (Divine Discourse, 14 Apr 1993)
மனிதர்கள் அவர்கள் ஆசைப்படும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறார்கள்;அவர்களது ஆசைகள் நிறைவேறாவிடில் ஏமாற்றம் அடைகிறார்கள். நீங்கள் எல்லாக் காலத்திலும் சுகத்தை மட்டுமே பெற முடியாது. சுகம் என்பது ,இரண்டு துக்கங்கள் நிறைந்த காலத்தின் இடைவெளியாகும். அவை சூரிய ஒளி மற்றும் நிழல் போன்றவை. இரண்டையும் சமச்சீரான மனநிலையோடு ஏற்றுக் கொள்ளுங்கள். சந்தனக் கட்டை அதை மேலும் மேலும் அரைக்க அரைக்க அதிக நறுமணத்தைத் தருகிறது. கரும்பு அதை நன்றாகப் பிழிந்தால் சுவையான சாறைத் தருகிறது. தங்கம் அது எரித்து , நெருப்பில் உருக்கப் படும் போது , தூய்மையடைந்து மெருகடைகிறது. அதைப் போலவே,ஒரு உண்மையான பக்தர்,வாழ்க்கையில் துன்பங்களையும், தடைகளையும் எதிர் கொள்ள நேர்ந்தாலும், இறைவன் பால் கொண்டிருக்கும் அவரது அன்பில் ஒரு போதும் தவறமாட்டார். இறைவன் தனது பக்தர்களை சோதிப்பது எல்லாம் அவர்களை ஆன்மீக ஏணியில் மேலும் உயர் நிலைக்குக் கொண்டு செல்வதற்காகவே. உண்மையான பக்தர்கள் புனிதமான வாழ்க்கையை நடத்துகின்றனர்;அது அவர்கள் இறைவன் பால் கொண்டுள்ள முழுமையான நம்பிக்கையுடன், தடைகளையும் பிரச்னைகளையும் எதிர் கொள்ளும்போது பரிசுத்தமடைகின்றது.