azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 07 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 07 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Difficulties, troubles and worries come in the natural course as a consequence of past actions. Human birth is the result ofKarma(past actions); there can be no escape from its consequences. As is your action, so is the reaction. When you stand before a mirror and offer salutation, your salutation gets reflected to you. If you address harsh words to the mirror, the harshness again comes back in the same manner. It is evident that the fruits of our actions are determined by the nature of our actions. Man is an image of God. 'God appears in human form(Daivam maanusha rupena)'declares the scriptures. God does not come down asAvatarto relieve specific individuals of their troubles and sorrow, and to confer joy and happiness on them. God takes a human form from time to time to show humanity how human lives can be divinised. (Divine Discourse, 3 Sep 1988.)
சிரமங்கள்,சிக்கல்கள் மற்றும் கவலைகள் , முந்தைய கர்மங்களின் விளைவாக, இயற்கையாகவே வருகின்றன. மனிதப் பிறவி கர்மத்தின் விளைவாகவே வருகின்றது; அதன் விளைவுகளிலிருந்து தப்ப முடியாது.உங்கள் செயல் எப்படியோ, எதிர் செயல்களும் அப்படியே.நீங்கள் ஒரு கண்ணாடியின் முன் நின்று நமஸ்கரித்தீர்கள் என்றால்,உங்களது நமஸ்காரம் அதில் பிரதிபலிக்கும். நீங்கள் கடுமையான வார்த்தைகளைக் கண்ணாடியின் முன் கூறினால்,அதே கடுமை அதே மாதிரி உங்களுக்குத் திருப்பி வரும். நமது செயல்களின் விளைவுகள் , நமது செயல்களைப் பொறுத்தே இருக்கும் என்பது தெளிவாகிறது. மனிதன் இறைவனின் பிரதிபிம்பம். ''இறைவன் மனித வடிவில் வருகிறான் ''( தெய்வம் மானுஷ்ய ரூபேனா ) என்கின்றன மறை நூல்கள்.ஒரு தனித மனிதருடைய கஷ்ட நஷ்டங்களைப் போக்கி, அவர்களுக்கு ஆனந்தம் அளிப்பதற்காக மட்டுமே இறைவன் அவதாரம் எடுத்து வருவதில்லை. எவ்வாறு மனித வாழ்க்கையை தெய்வீகமாக்க முடியும் என்பதைக் காட்டுவதற்காக, ஒவ்வொரு கால கட்டத்திலும் இறைவன் மனித உருவைத் தாங்கி வருகிறான்.