azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 06 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 06 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Because Nature is a reflection of the Divine, its laws cannot be transgressed by anyone. Human beings are gifted this birth to realise their own true nature. Instead of seeking to understand the truth about the cosmos, people lose it in the pursuit of material possessions. They do not realise that the human body made up of five basic elements, is bound to perish. This temporary and perishable body should be regarded only as a means for realising the eternal Reality. The body should be considered as an iron safe, in which the precious jewels of good qualities and good actions are kept. It is these qualities that should be cherished. If today, the state of the world appears deplorable, it is because people's actions and conduct are not good. People should return to the ways of righteousness and lead a good and godly life. (Divine Discourse, 3 Sep 1988.)
இயற்கை இறைவனின் பிரதிபலிப்பாக இருப்பதால், அதன் விதிகளை எவராலும் மீற இயலாது. மனிதர்கள் தங்களது உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காகவே இந்தப் பிறவி பரிசாக அளிக்கப் பட்டுள்ளது.இந்த பிரபஞ்சத்தின் உண்மையைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல், மனிதர்கள் இதை உலகியலான தேடல்களில் இழந்து விடுகிறார்கள்.பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடல் கண்டிப்பாக அழியத்தான் செய்யும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை.இந்த தாற்காலிகமான மற்றும் அழியக்கூடிய உடல் நித்ய சத்யத்தைப் புரிந்து கொள்வதற்கான கருவி மட்டுமே என்று கருதப்பட வேண்டும். நற்குணங்கள் மற்றும் நற்செயல்கள் என்ற விலை மதிக்க முடியாத ஆபரணங்கள் வைக்கப் பட்டு இருக்கும் இரும்புப் பெட்டியாக இந்த உடலைக் கருத வேண்டும்.இந்த குணங்களைத் தான் போற்றிப் பாதுகாக்க வேண்டும். இன்று உலகின் நிலைமை பரிதாபகரமாக இருப்பதைப் போல் தோன்றுகிறது என்றால்,அதற்குக் காரணம் மனிதர்களின் செயல்களும், நடத்தையும் நல்லவைகளாக இல்லாதது தான்.மனிதர்கள் தார்மீக மார்க்கத்திற்கு திரும்பி, நல்ல மற்றும் தெய்வீகமான வாழ்க்கை நடத்த வேண்டும்.