azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 04 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 04 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Love can be cultivated through two methods: Always consider the faults of others, however big, to be insignificant and negligible. Always consider your own faults, however insignificant and negligible, to be big, and feel sad and repentant. Through this path, you avoid developing bigger faults and defects and acquire the virtues of brotherliness and forbearance. Next, whatever you do, with yourself or with others, do it remembering that God is omnipresent. He sees and hears and knows all. Remember that God hears every word; discriminate between the true and the false and speak only the truth. Discriminate between right and wrong and do only the right. Endeavour every moment to be aware of the omnipotence of God. The body is the temple of the individual, so whatever happens in that temple is the concern of the individual. So too, the world is the body of the Lord, and all that happens in it, good or bad, is His concern. (Prema Vahini, Ch 19.)
ப்ரேமையை இரண்டு விதமாக வளர்த்துக் கொள்ளலாம்; எப்போதும், மற்றவர்களது குறைகளை, அவை எவ்வளவு பெரிதாக இருந்தாலும், முக்கியத்துவம் அற்றதாகவும், அற்பமானதாகவும்,கருதுங்கள்.உங்களது குறைகளை, அவை எவ்வளவு முக்கியத்துவம் அற்றதாகவும், அற்பமானதாகவும் இருந்தாலும், எப்போதும், அவற்றை மிகவும் பெரிதாகக் கருதி, அதற்காக வருந்தி, இறைவனிடம் மன்னிப்பு கேளுங்கள்.இந்தப் பாதையின் மூலம் மேலும் பெரிய தவறுகளையும், குறைகளையும்,நீங்கள் தவிர்த்து, சகோதரத்துவம் மற்றும் சகிப்புத் தன்மை என்ற நற்குணங்களைப் பெறுவீர்கள். அடுத்ததாக, ,உங்களுக்கோ அல்லது பிறருக்கோ,நீங்கள் எதைச் செய்தாலும், இறைவன் நீக்கமற அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன் என்பதை நினைவில் கொண்டு, செய்யுங்கள்.அனைத்தையும் காண்பவன், கேட்பவன் மற்றும் அறிந்தவன் அவனே.இறைவன் ஒவ்வொரு வார்த்தையும் கேட்கிறான் என்பதை நினைவில் கொண்டு,உண்மை எது,பொய் எது எனப் பகுத்தறிந்து, உண்மையை மட்டுமே பேசுங்கள். நல்லவை எது, கெட்டது எது எனப் பகுத்தறிந்து, நல்லவற்றை மட்டுமே செய்யுங்கள்.ஒவ்வொரு தருணத்திலும் இறைவன் ஸர்வ வல்லமை படைத்தவன் என்ற உணர்வுடன் இருக்க முயலுங்கள். இந்த உடல் ஒரு தனித மனிதனின் ஆலயம்;எனவே, இந்த ஆலயத்தில் எது நடந்தாலும் அது அந்த தனி மனிதனின் பொறுப்பாகிறது. அதைப் போலவே, இந்த உலகமும் இறைவனின் உடலாகும்; எனவே இதில் நடந்தாலும், நல்லதோ, கெட்டதோ அது இறைவனின் பொறுப்பாகிறது.