azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 03 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 03 Apr 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Three types can be recognised among those who seek to do good deeds and tread the path of self-realisation - those who are too frightened by troubles, losses, and difficulties to even begin the endeavour; they are of the lowest type. The next are those who, after having undertaken the journey and gone some distance, are depressed and defeated by obstacles and disappointments and give up in the middle; they are of the middling type. Lastly, those who steadfastly adhere to the path with calmness and courage, whatever the nature of the travail or however hard the road; these are, of course, of the highest type. This steadfastness, faith and constancy, is the characteristic of the devotee. You may be deluded by attachment to this illusory world and attracted by temporal joy, but never barter away the means of achieving permanent and complete happiness. And carry on your spiritual duties with full devotion. (Prema Vahini)
நல்ல செயல்களை ஆற்ற முயன்று, ஆத்ம சாக்ஷாத்காரத்தின் பாதையில் நடந்து செல்பவர்களில் மூன்று விதமானவர்களைக் காணலாம் - இதில் முதலில், கஷ்ட, நஷ்டங்கள் மற்றும் துன்பங்களுக்கு பயந்து, இதற்கான முயற்சியையே எடுக்காமல் இருப்பவர்கள்; இவர்களே அனைவரிலும் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள். இவர்களுக்கு அடுத்ததாக, இந்தப் பயணத்தில் சிறிது தூரம் சென்று விட்டு,தடைகள் மற்றும் ஏமாற்றங்களால் சோர்வும், தோல்வி மனப்பாங்கும் ஏற்பட்டு நடுவிலேயே முயற்சியை கைவிட்டு விடுபவர்கள்- இவர்கள் நடுத்தரமானவர்கள். இறுதியாக, அமைதி மற்றும் தைரியத்துடன், எந்த விதமான துன்பம் இருந்தாலும்,பாதை எவ்வளவு கடினமாக இருந்தாலும், இந்தப் பாதையை விடாமுயற்சியுடன் பற்றி இருப்பவர்கள்; இவர்களே உண்மையில் தலை சிறந்தவர்கள்.இப்படிப் பட்ட விடாமுயற்சி,நம்பிக்கை மற்றும் நிரந்தரத்துவமே ஒரு பக்தருக்கு அழகாகும். நீங்கள்,இந்த கற்பனையான உலகின் மீது உள்ள பற்றுதலால் மயக்கம் கொண்டும், தாற்காலிகமான சந்தோஷங்களால் கவரப்பட்டும் இருக்கலாம்; ஆனால், ஒரு போதும், நிரந்தரமான மற்றும் முழுமையான ஆனந்தத்தைப் பெறுவதற்கான வழியைக் கைவிட்டு விடாதீர்கள்.உங்களது ஆன்மீக சாதனைகளை பக்தியுடன் தொடருங்கள்.