azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 31 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 31 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

The vehicle of human life is drawn by the senses, driven by the intellect, with discrimination and detachment as the reins on the two wheels of Time and Action. The spokes of the wheel are the rules of righteousness, bound by the rim of Love. Your journey will be smooth, if your axle is Truth and your goal is Peace. Be careful to not exaggerate the importance of things that have material utility. They fade, even while you grasp them. Search for truth(Sath)- that which suffers no change, and Awareness(Chith)- the state of consciousness which is pure, unaffected by gusts of passion and is free from egoism or the desire to possess. Then you will experience Light, and illumine the Path for others. Experience the joy that emanates from Love with no blemish of attachment. (Divine Discourse, 25 Apr 1961.)
மனித வாழ்க்கை எனும் ரதம் புலன்களால் இழுக்கப் பட்டு, காலம் மற்றும் செயல் என்ற சக்கிரங்களின் மீது, பகுத்தறிவு மற்றும் பற்றின்மை என்ற கடிவாளங்களைக் கொண்டு, புத்தியால் ஓட்டப்படுகிறது. அந்தச் சக்கிரங்கள் தர்மத்தினாலான ஆரக் கம்பிகளையும், ப்ரேமையினால் ஆன விளிம்புகளையும் கொண்டது. சத்தியம் உங்களது அச்சாகவும், சாந்தி உங்களது இலக்காகவும் இருக்குமானால்,உங்கள் பயணம் ஏற்ற இறக்கமின்றி இருக்கும். உலகியலான பொருட்களின் பயன்களை மிகைப் படுத்தாமல் இருப்பதில் கவனமாக இருங்கள்.நீங்கள் அவற்றைப் பிடிக்கும் போதே அவை தேய்ந்து விடும். மாற்றமே அற்ற '' சத்''தையும், கட்டுக்கடங்காத உணர்ச்சி வெள்ளத்தால் பாதிக்கப் படாத மற்றும் அஹங்காரம் அல்லது ஒன்றை அபகரிக்கும் ஆசையோ அற்ற, தூய உணர்வு நிலையான '' சித்''தையும் தேடுங்கள். பின்னர் நீங்கள் பரஞ்சோதியை அனுபவித்து, மற்றவர்களது பாதைக்கும் ஒளியூட்டுவீர்கள். பற்றுதல் என்ற களங்கமே இல்லாத ப்ரேமையிலிருந்து எழும் ஆனந்தத்தை அனுபவியுங்கள்.