azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 27 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 27 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
The almanac (calendar) might indicate that ten units of rain will fall, but even if the daily sheet on the calendar is folded ten times and squeezed, not a drop of rain can be extracted. The purpose of the calendar is not to give rain but only to give information about rain and its quantity; its pages do not contain the ten units of rain which is there only in the clouds above. So too, the scriptures(shastras)can only give information about doctrines, axioms, rules, regulations, and duties. The sublime characteristics of the Vedas, the Upanishads, and scriptures are that they give instruction in the methods of attaining peace and liberation. But they aren't saturated with these essences of bliss; one can't collect the essences by squeezing the texts. One has to discover the path, direction, and goal as described in them, and then tread the path, follow the direction, and reach the goal. (Prema Vahini, Ch 16)
இன்றைய காலண்டர் இன்று பத்து பங்கு அளவு மழை கொட்டும் எனக் கூறலாம்;ஆனால், அதற்காக அந்த காலண்டரின் தினச்சீட்டைப் பத்து தடவை மடித்து, பிழிந்தால் ஒரு சொட்டு மழை நீரைக் கூடப் பெற முடியாது. காலண்டரின் குறிக்கோள் மழை தருவதல்ல,ஆனால் மழையைப் பற்றியும், அதன் அளவைப் பற்றியும் உள்ள விவரத்தைத் தருவதாகும்; அதன் பக்கங்கள் பத்து பங்கு மழை நீரைக் கொண்டதல்ல; அது மேலே உள்ள மேகங்களில் தான் இருக்கும்.அதைப் போலவே, சாஸ்திரங்கள் (மறை நூல்கள்) சிந்தாந்தங்கள், வெளிப்படை உண்மைகள், சட்ட திட்டங்கள் மற்றும் கடமைகளைப் பற்றிய விவரங்களை மட்டுமே தர முடியும்.வேதங்கள், உபநிஷதங்கள் மற்றும் மறைநூல்களின் சிறப்பு என்ன என்றால், அவை சாந்தி மற்றும் மோக்ஷத்தை அடைவதற்கான முறைகளின் அறிவுறுத்தல்களைத் தருகின்றன. ஆனால்,அவை பேரானந்தத்தின் சாரத்தில் தோய்ந்தவை அல்ல; அவற்றைப் பிழிவதால் ஒருவர் அந்த சாரத்தைப் பெற முடியாது. அவற்றில் விவரிக்கப் பட்டுள்ள பாதை, வழிகாட்டிகள் மற்றும் குறிக்கோள்களை ஒருவர் கண்டறிந்து, அந்தப் பாதையில் நடந்தும்,அந்த வழிகாட்டிகளைப் பின்பற்றியும், குறிக்கோளைச் சென்று அடைய வேண்டும்.