azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 23 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 23 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
The entire Universe is suffused with Divinity. Since your mind is steeped inPrakruthi(worldly objects) you are not able to seeParamatma(Divine). Just as when you focus your attention at a necklace, you shut your eyes to what it is made of, similarly as long as you look at the world with a materialistic attitude, Divinity shuts itself off from us. Once you gaze at the world with a divine attitude you see only Divinity. Who are the thieves that steal from every human being their peace and joy? They are the thieves of desire, pride, greed, infatuation, anger and jealousy, who rob a man of all his riches. But the worst of all thieves who inflicts the worst damage ismatsarya(envy). We must win over our internal enemies and turn our gaze to Divinity who pervades the entire Universe. (Summer Showers in Brindavan 1993, Ch 6.)
இந்த பிரபஞ்சம் அனைத்தும் தெய்வீகத்தில் தோய்ந்திருக்கிறது; உங்கள் மனம் உலகியலான பொருட்களில்( ப்ரக்ருதி) மூழ்கிக் கிடப்பதால், உங்களால் பரமாத்மாவைக் காண முடிவதில்லை.எப்படி நீங்கள் ஒரு கழுத்தணியில்(நெக்லஸ்) உங்கள் கவனத்தைச் செலுத்தும்போது, எவ்வாறு அது எதால் ஆனது என்பதைக் காணத் தவறுகிறீர்களோ , அவ்வாறே இந்த உலகை பொருட்களின் கண்ணோட்டத்துடன் நீங்கள் பார்க்கும் வரை, தெய்வீகம் நம்மிடமிருந்து தன்னை மறைத்துக் கொண்டு விடுகிறது.எப்போது உலகை நீங்கள் தெய்வீகக் கண்ணோட்டத்துடன் காண்கிறீர்களோ, நீங்கள் தெய்வீகத்தை மட்டுமே காண்பீர்கள். ஒவ்வொரு மனிதனிடமிருந்து அவர்களது சாந்தி, சந்தோஷங்களைத் திருடிக் கொள்ளும் கள்வர்கள் யார்? ஒரு மனிதனின் செல்வங்களை எல்லாம் அபகரித்துக்கொள்ளும், காமம், க்ரோதம், மோஹம், லோபம், மதம், மாத்ஸர்யம் என்பவைகளே அந்தக் கள்வர்கள். ஆனால், இந்தக் கள்வர்களில் அதிக நாசத்தை விளைவிக்கும் மிகவும் மோசமானவன் பொறாமை எனும் மாத்ஸர்யமே.நாம் இந்த உள் எதிரிகளை வென்று, நமது பார்வையை இந்த பிரபசஞ்சம் அனைத்தும் வியாபித்திருக்கும் தெய்வீகத்தை நோக்கித் திருப்ப வேண்டும்.