azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 21 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 21 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
You would have celebrated manyUgadi(New Year day) festivals in your life. Certain traditional practices go with every festival, such as having a sacred bath, wearing new clothes, cleaning the house and decorating it with buntings of green leaves. Greatness lies in purifying our thoughts, not merely the transient human body. The significance of a festival does not lie in wearing new clothes but in cultivating new and noble thoughts. The house should be decorated not merely with the buntings of green leaves, but with buntings of love. Share your love with everyone who visits your house. Only then would we be celebrating the festival in its true spirit. This is the beginning ofNuthana Samvatsara(New Year). Vatsara is another name of God. Time is God.Divine Discourse, 18 Mar 1999)
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல யுகாதி பண்டிகைகளைக் ( தெலுங்கு புத்தாண்டு) கொண்டாடி இருக்கக் கூடும். சில பாரம்பரிய பழக்கங்கள் ஒவ்வொரு பண்டிகையிலும் இருக்கும் - அதாவது புனித நீராடுவது, புத்தாடைகளை அணிவது,இல்லத்தைத் துப்புரவாக்கி,அதை மாவிலைத் தோரணங்களால் அலங்கரிப்பது போன்றவை.நிலையற்ற வெறும் உடலை இன்றி, நமது எண்ணங்களைத் தூய்மைப் படுத்துவதில் தான் பெருமை இருக்கிறது. ஒரு பண்டிகையின் விசேஷம், புதிய மற்றும் சீரீய எண்ணங்களை வளர்த்துக் கொள்வதில் இருக்கிறதே அன்றி, புத்தாடைகளை அணிவதில் இல்லை. இல்லம் வெறும் மாவிலைத் தோரணங்களால் மட்டுமே அலங்கரிக்கப் படாமல், அன்புத் தோரணங்களால் அலங்கரிக்கப் பட வேண்டும்.உங்கள் இல்லத்திற்கு வரும் அனைவருடனும் உங்கள் அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள். அதன் பின்னரே, நாம் அந்தப் பண்டிகையை அதன் உண்மையான அர்த்தத்தில் கொண்டாடுபவர்களாக இருப்போம். இது புத்தாண்டின் (நூதன சம்வஸ்திரம்) தொடக்கம். வஸ்திரா என்பது இறைவனின் மற்றொரு நாமம். காலமே இறைவன்.