azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 17 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 17 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

People create and develop in themselves an abounding variety of selfish habits and attitudes, causing great discontent for themselves. The impulse for all this comes from the greed for accumulating authority, domination, and power. Greed for things can never be eternal and full; it is just impossible for anyone to be satiated in fulfilling greed. Omnipotence belongs only to the Lord of all(Sarveswara).You may feel elated to become the master of all arts, owner of wealth, possessor of all knowledge, or repository of all the scriptures, but where did these come from? You may claim that you earned this through your own efforts, labour, and toil. But surely, it was given to you by someone some way or other. The source from which all authority and all power originate is the Lord of all. Ignoring that omnipotence, and deluding yourself that the little power you acquired is your own — is indeed is selfishness, conceit and pride(ahamkara). (Prema Vahini, Ch 14.)
மனிதர்கள் அநேக விதமான சுயநலமான பழக்கங்களையும், மனப்பாங்குகளையும் தங்களுக்குள் வளர்த்துக் கொண்டு,தங்களுக்கே மிகப் பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.இவை அனைத்திற்கும் தேவையான உந்துதல்கள் பதவி, அந்தஸ்து, அதிகாரம் ஆகியவற்றைக் குவித்துக் கொள்வதற்கான பேராசையிலிருந்து வருகின்றன. பொருட்களுக்கான பேராசை ஒருபோதும் நிரந்தரமாகவோ அல்லது முழுமையாகவோ ஆகாது;ஒருவராலும் பேராசையைத் திருப்திப்படுத்த இயலாது. ஸர்வ வல்லமை என்பது ஸர்வேஸ்வரனுக்கு மட்டுமே சொந்தம். அனைத்து கலைகளிலும் தேர்ந்தவராகவோ,செல்வந்தராகவோ, அனைத்து ஞானம் பெற்றவராகவோ அல்லது அனைத்து சாஸ்திரங்களின் பெட்டகமாகவோ நீங்கள் இருப்பதாக உவகை கொள்ளலாம்; ஆனால் இவை அனைத்தும் எங்கிருந்து வந்தன ?இதை எல்லாம் நீங்கள் உங்களது சொந்த முயற்சி மற்றும் உழைப்பால் பெற்றதாகப் பெருமை சாற்றிக் கொள்ளலாம்.ஆனால் கண்டிப்பாக, இவற்றை யாரோ ஒருவர் தான், எவ்விதமாகவோ உங்களுக்கு அளித்திருக்க வேண்டும்.அனைத்து அதிகாரமும், அனைத்து அந்தஸ்துகளும் தோன்றும் மூலாதாரம் இவை அனைத்திற்கும் அதிபதியான இறைவனே. அந்த ஸர்வ வல்லமையை உதாசீனப்படுத்தி விட்டு,நீங்கள் பெற்றுள்ள இந்த சிறிய சக்தி உங்களுடையதே என்று மயக்கம் கொள்வது உண்மையில் சுயநலமும், அகந்தையும்,அஹங்காரமும் ஆகும்.