azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 16 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 16 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
When the moon is just a little arc in the sky and one desires to see it, a person indicates it by pointing a finger towards it. Or, when one desires to look at a particular star, a person says, "There, just above that branch of this tree." The moon is far away, and the star is much farther. At the moment it could be seen just above the branch, but that is only a temporary location. Soon, the location changes. The finger can no longer be correct, for the star or moon moves across the sky. But the genuine characteristic never undergoes change. The form may suffer change; the name may change; times may change; and the space it occupies may change. But the core of Truth will not change. That core is denoted as existence, luminescence, and attractiveness(asthi, bhathi, priyam)in Vedantic texts. The above three together are the nature of God. On these as the basis, forms are constructed by the mind, and names for the forms follow.( Sutra Vahini, Ch 2.)
சந்திரன் ஒரு சிறு கீற்றாக வானத்தில் தோன்றும் போது ஒருவர் அதைப் பார்க்க விரும்பினால்,ஒரு மனிதர் அதை நோக்கித் தனது விரலை நீட்டி அதைச் சுட்டிக் காட்டுவார். ஒரு குறிப்பிட்ட நக்ஷத்திரத்தைப் பார்க்க வேண்டும் என ஒருவர் விரும்பினால், ஒரு மனிதர், '' அங்கே பார், அந்த மரத்தின் கிளைக்கு மேலே இருக்கிறது '' என்று கூறுவார்.சந்திரன் மிகத் தொலைவில் உள்ளது,நக்ஷத்திரமோ அதைவிடத் தொலைவில் உள்ளது. தற்சமயம் அதை அந்த மரக்கிளைக்குச் சற்று மேலே காண முடியும்; ஆனால் அது ஒரு தாற்காலிகமான இருப்பிடமே.பின்னர் அதன் இருப்பிடம் மாறி விடுகிறது. விரலால் அதைக் காண்பிப்பது இனிமேல் சரியாக இருக்காது; ஏனெனில் நக்ஷத்திரமோ அல்லது சந்திரனோ அந்த இடத்திலிருந்து வானத்தில் நகர்ந்து விடுகிறது. ஆனால் அதன் உண்மையான தன்மை ஒருபோதும் மாற்றம் அடைவதில்லை.அதன் ரூபம் மாறலாம்,நாமம் மாறலாம்; காலம் மாறலாம், அது வியாபித்திருக்கும் பரப்பளவு கூட மாறலாம்.ஆனால் அடிப்படைச் சத்தியம் மாறுவதே இல்லை. இந்த அடிப்படைத் தத்துவத்தையே வேதாந்தம் இருத்தல், ஒளிர்தல் மற்றும் கவருதல்(அஸ்தி,பாதி,மற்றும் ப்ரியம்) என்று கூறுகிறது. இந்த மூன்றும் ஒன்றாக இணைந்திப்பதே இறைவனின் இயல்பாகும். இவற்றை ஆதாரமாகக் கொண்டு ரூபங்கள் மனதால் உருவாக்கப் படுகின்றன; அந்த ரூபங்களுக்கான , நாமங்கள் அவற்றைத் தொடர்ந்து வருகின்றன.