azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 13 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 13 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
In this material world, one cannot appreciate the value of spiritual endeavor without experience in spiritual life and its purity. It may be said that one can undertake spiritual endeavor only after appreciating its value, but this is like saying that one should get into water only after learning to swim. Swimming can be learned only by getting into water with a float attached to the body. In the same way, with some float attached to the mind, plunge without fear into spiritual discipline. Then, you will yourself understand the value of spiritual endeavor. The nature and conditions of the spiritual path are known only to those who have journeyed along the road. They know that the path of truth and discrimination (SathyaandViveka) leads to God(Paramatma).Those who have not trodden that path and those who are not aware of its existence cannot explain it to themselves or to others (Prema Vahini.)
இந்த உலகில், ஆன்மீக வாழ்க்கை மற்றும் அதன் பரிசுத்தத்தின் அனுபவம் இன்றி, ஒருவர் ஆன்மீக சாதனையின் மதிப்பை உணர முடியாது. அதன் மதிப்பை உணர்ந்த பிறகே,ஆன்மீக சாதனையை ஒருவர் செய்ய முடியும் என்று கூறக் கூடும்; நீச்சல் கற்றுக் கொண்ட பிறகே, ஒருவர் தண்ணீரில் இறங்க வேண்டும் என்று கூறுவதைப் போல இருக்கிறது இது. உடலில் ஒரு மிதப்பானைக் ( float) கட்டிக் கொண்டு தண்ணீரில் இறங்கிய பிறகே ஒருவர் நீச்சலைக் கற்றுக் கொள்ள முடியும்.அதைப் போலவே, உங்கள் மனதில் ஒரு மிதப்பானைக் கட்டிக் கொண்டு பயமின்றி ஆன்மீக சாதனையில் குதியுங்கள்.பின்னர்,நீங்களே ஆன்மீக சாதனையின் மதிப்பை உணருவீர்கள். ஆன்மீகப் பாதையின் இயல்பு மற்றும் நிலமைகள், அந்தப் பாதையில் சென்றவர்களுக்கு மட்டுமே தெரிய முடியும். சத்யமும்,விவேகமும் நிறைந்த பாதையில் செல்வது பரமாத்மாவிடம் இட்டுச் செல்லும் என்பதை அவர்கள் அறிவார்கள். அந்தப் பாதையில் செல்லாதவர்களும்,அப்படி ஒன்று இருக்கிறது என்றே அறியாதவர்களும் ,தங்களுக்கோ அல்லது பிறருக்கோ அதை விளக்கிக் கூற முடியாது.