azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 12 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 12 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Today people are too immersed in the all-pervasive delusion to take advantage of the natural characteristics in the Universe and elevate themselves. They are unable to hold on to the good and avoid the bad, and establish themselves on the righteous(dharmic)path. They are ignorant of the path of peace and harmony in the world. The scriptures clearly teach: From which you are born, by which you live, into which you dissolve —‘That’ isBrahman.God is ‘That’ from which the manifested cosmos emanated with its moving and unmoving entities; ‘That’ prompts, promotes and fosters your progress. The cosmos is not one continuous flux. It progresses persistently toward achieving totality in its evolution. Everyone can transform themselves from their present status only through their own self-effort and discrimination. The moral forces permeating the cosmos will certainly promote your achievement. (Sutra Vahini, Ch 2.)
இந்நாளில் ,மனிதர்கள் இந்த பிரபஞ்சத்தின் இயற்கைக் குணங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு,தங்களை உயர்த்திக் கொள்ளலாம் என்ற, எங்கும் பரவியிருக்கும் மாயையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். அவர்கள் நல்லவற்றைப் பற்றிக் கொண்டு, தீயவற்றை விடுத்து, தர்மத்தின் பாதையில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள்.அவர்கள் இந்த உலகில் இசைவும், சாந்தியும் பொருந்திய பாதையை அறியாவர்களாக இருக்கிறார்கள். எதிலிருந்து நீங்கள் தோன்றினீர்களோ, எதனால் நீங்கள் வாழ்கிறீர்களோ, எதில் நீங்கள் சங்கமம் ஆவீர்களோ, அதுவே பரப்பிரம்மம் என்று மறை நூல்கள் தெளிவாகப் போதிக்கின்றன. சகல சராசங்களுடன் கூடிய இந்த பிரபஞ்சம் எதிலிருந்து தோன்றியதோ அதுவே ''இறைவன்''; அதுவே உங்களைத் தூண்டி, துணை நின்று, உங்களது முன்னேற்றத்தைப் பேணிக் காக்கிறது. இந்த பிரபஞ்சம், தொடர்ச்சியான ஒரு ஏற்ற இறக்கம் அல்ல. அது இடையறாது தனது பரிணாமத்தில் பரிபூணத்துவத்தை அடைவதற்காக முன்னேறிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொருவரும், தங்களது சுய முயற்சி மற்றும் பகுத்தறியும் தன்மையால் மட்டுமே, தங்களது தற்கால நிலையிலிருந்து, தங்களை மாற்றிக் கொள்ள முடியும். இந்த பிரபஞ்சத்தில் வியாபித்திருக்கும் நற்குண நலன்களின் சக்திகள் உங்களது வெற்றிக்கு கண்டிப்பாக ஊக்கம் அளிக்கும்.