azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 07 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 07 Mar 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
A time may come when you become tired and weak. Then you should pray thus: “Lord, things are beyond my capacity. I am finding it difficult to do any effort. Please give me strength!” At first, God stands at a distance, watching your efforts, like the invigilator teacher watching students write answers during examination. Then when you shed attachment to sensual pleasures(bhoga)and take to good deeds and selfless service, God comes nearer to you. Like the Sun, He waits outside your closed door. Like a servant who knows their master’s rights and their own limitations, God doesn’t bang the door but simply waits outside. When one opens the door just a little, like the Sun, God rushes in and promptly drives darkness out from within. So all you need is the discrimination(viveka)to pray and the spiritual wisdom(jnana)to remember Him. (Prema Vahini, Ch 1.)
நீங்கள் தளர்ந்து,பலஹீனர்களாக ஆகி விடும் ஒரு தருணம் வரலாம். அப்போது நீங்கள்,'' இறைவா ! நிலமை எனது சக்திக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. எந்த முயற்சியும் செய்ய இயலாதவனாக இருக்கிறேன். தயவு செய்து எனக்கு சக்தி அளியுங்கள்.'' என்று பிரார்த்திக்க வேண்டும்.முதலில் இறைவன், பரீட்சை ஹாலில், மாணவர்கள் விடைகள் எழுதுவதைப் கவனிக்கும் கண்காணிப்பாளரைப் போல கொஞ்சம் தொலைவில் நின்று, உங்களது முயற்சிகளைக் கவனிப்பான். பின்னர், எப்போது நீங்கள் புலனின்பங்களில் பற்றுதலை விடுத்து, நற்செயல்களையும், தன்னலமற்ற சேவையையும் ஆற்றுகிறீர்களோ, இறைவன் உங்களது அருகாமையில் வந்து விடுகிறான். சூரியனைப் போல,அவன் மூடியிருக்கும் உங்களது வாசற் கதவின் வெளியே காத்திருக்கிறான். தனது எஜமானரின் உரிமைகளையும், தனது வரம்புகளையும் அறிந்த ஒரு சேவகனைப் போல, இறைவன் கதவைத் தட்டாமல், வெறுமனே வெளியிலேயே காத்திருக்கிறான். ஒருவர் கதவை, சிறிதளவு திறந்தவுடனேயே, ஆதவனைப் போல, ஆண்டவன் பறந்தோடி வந்து, உள்ளிருக்கும் இருளை உடனே விரட்டி விடுகிறான். எனவே உங்களுக்குத் தேவையானதெல்லாம், அவனை வந்திக்கும் விவேகமும், அவனை சிந்திக்கும் ஞானமும் மட்டுமே.