azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 17 Feb 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 17 Feb 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Rathrimeans night, signifying darkness. Shiva means auspiciousness. 'Shivarathri' signifies auspiciousness which is inherent in darkness. It refers to the wisdom which exists in the midst of ignorance. Wisdom and ignorance are not two different things; they are essentially the same, opposite polarities of the same underlying principle. The state that transcends both wisdom and ignorance is Divinity,Paratatva. This Shivarathri is a day when one tries to establish friendship between mind and God. Shivarathri reminds everyone of the fact that Divinity is all-pervasive and is to be found everywhere. It is said that Shiva lives in Kailasa. But where is Kailasa? Kailasa is our own mind full of joy and bliss. It means that when you develop purity, steadiness and sacredness from within, your heart becomes filled with peace and bliss, and ultimately your heart itself is Kailasa. (Divine Discourse 17 Feb 1985.)
ராத்ரி என்றால் இருளைக் குறிக்கும் இரவு என்று பொருள்.சிவ என்றால் மங்களம் எனப் பொருள். ''சிவராத்ரி '' இருளிலும் இயல்பாகப் பொதிந்திருக்கும் மங்களத்தைக் குறிக்கிறது.அஞ்ஞானத்தின் நடுவில் குடி கொண்டிருக்கும் ஞானத்தைச் சுட்டிக் காட்டுகிறது. ஞானமும், அஞ்ஞானமும் இரண்டு வெவ்வேறானவை அல்ல;அவை அடிப்படையில் ஒன்றே;ஆதாரமான ஒரே கோட்பாட்டின் ஒன்றுக்கு ஒன்று எதிரான இரு துருவங்களே அவை.ஞானம், அஞ்ஞானம் என்ற இரண்டிற்கும் அப்பாற் பட்ட நிலையே தெய்வீகம் எனும் பரதத்துவம். மனதிற்கும் இறைவனுக்கும் இடையில் நட்பு நிலையை உருவாக்க ஒருவர் முயற்சி செய்யும் நாளே இந்த சிவராத்ரி. தெய்வீகம் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தது,எங்கும் காணக்கூடியது என்ற உண்மையை, சிவராத்ரி, ஒவ்வொருக்கும் நினைவு படுத்துகிறது. சிவ பெருமான் திருக்கைலாயத்தில் வசிக்கிறான் என்பார்கள். திருக்கைலாயம் எங்கிருக்கிறது? சந்தோஷமும்,ஆனந்தமும் நிரம்பி வழியும் நமது மனமே திருக்கைலாயம். அதாவது,எப்போது நீங்கள் உங்களுள் தூய்மை,ஸ்திரத்துவம் மற்றும் புனிதத்துவத்தை வளர்த்துக் கொள்கிறீர்களோ, உங்களது இதயமும் சாந்தி, சந்தோஷங்களால் நிரம்பி விடுகிறது; இறுதியில் உங்கள் இதயமே திருக்கைலாயமாகி விடுகிறது.