azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 10 Feb 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 10 Feb 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

In the course of one’s day to day activities a number of small creatures and insects may be destroyed. In these and other ways, sins may be committed, knowingly or unknowingly. For removing such sins, the scriptures have prescribed five types ofYajnasor worships -Brahma Yajna, Deva Yajna, Pitru Yajna, Manushya Yajna and Bhuta Yajna. Brahma Yajnais the study of sacred books and scriptures.Deva Yajnainvolves offering worship, bhajans, etc.Pitru Yajnarefers to ceremonies to departed ancestors. The fourth one,Manushya Yajna,refers to extending hospitality to guests, invited and uninvited.Bhuta Yajnarefers to offering food to animals, birds and insects, and looking after wild animals. By engaging in such service and thereby fulfilling the requirements of theseYajnas,we can atone for sins of various kinds that might have been committed. (Divine Discourse, 7 Jul 1985.)
ஒருவரது அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளின் போது, பல எண்ணிக்கையில் சிறிய புழு பூச்சிகள் அழிக்கப் படக் கூடும். இவ்வாறும், மற்றும் பல வழிகளிலும், அறிந்தோ அல்லது அறியாமலோ, பாவங்கள் செய்யப் படலாம். இப்படிப் பட்ட பாவங்களைத் தீர்ப்பதற்கு,சாஸ்திரங்கள் ஐந்து விதமான யக்ஞங்கள் அல்லது வழிபாடுகளை அறிவுறுத்தியுள்ளன-ப்ரம்ம யக்ஞம்,தேவ யக்ஞம், பித்ரு யக்ஞம், மனுஷ்ய யக்ஞம் மற்றும் பூத யக்ஞம்.ப்ரம்ம யக்ஞம் என்பது புனித நூல்களையும்,சாஸ்திரங்களையும் கற்பது.தேவ யக்ஞத்தில் வழிபாடுகள், பஜனைகள் போன்றவை அடங்கும்.பித்ரு யக்ஞம், நமது முன்னோர்களுக்காக செய்யப்படும் சிரார்த்தங்களைக் குறிக்கிறது.நான்காவதான மனுஷ்ய யக்ஞம், விருந்தினர்கள் , அழைக்கப் பட்டவர்கள், அழைக்கப் படாதவர்கள் என்று அனைவருக்கும் விருந்தோம்பல் செய்வதைக் குறிக்கிறது. பூத யக்ஞம், மிருகங்கள்,பறவைகள் மற்றும் பூச்சிகளுக்கு உணவு அளிப்பது மற்றும் கொடிய விலங்குகளைப் பராமரிப்பது ஆகியவற்றைக் குறிக்கிறது. இப்படிப் பட்ட சேவைகளை ஆற்றி, இந்த யக்ஞங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தால், நாம் ஒரு வேளை செய்திருக்கக் கூடிய பல விதமான பாவங்களுக்குப் பரிஹாரம் செய்து கொள்ள முடியும்.