azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 28 Jan 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 28 Jan 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Today, though in outward appearance people are human, in inner impulse they are sub-human and demonic; the one who has no charity or sacrifice(dana)is called aDanava(demon). Divine(Deva)and demon(Danava)are both present in the human make-up and now the devil rules the roost! Therefore people have lost their glow, power and splendour! Every one of you must strive and win it again by spiritual practices(Sadhana).So make yourselves pure by incessant striving. Remain convinced that the world can give you only fleeting joy; grief is but the obverse of joy. Strive now, from this very moment and develop full and everlasting happiness. Be true to yourself. Be bold and focused on your goal; be sincere in your practices from today, for time is rushing like a swift torrent. (Divine Discourse, Dec 28, 1960.)
Just as there is tasty juice in fruit, butter in milk, fragrance in flower and fire in wood, there is Divinity everywhere in the vast universe. – Baba
இன்று, வெளித்தோற்றத்தில் மக்கள் மனிதர்களாக இருந்தாலும்,உள்ளார்ந்த உந்துதல்களில் அவர்கள் கீழ்த்தரமானவர்களாகவும், அசுரர்களாகவும் இருக்கின்றனர்; தானகுணம் ( தான) அற்ற ஒரு மனிதன், ஒரு அசுரன் ( தானவ) என்றே அழைக்கப் படுகிறான். தெய்வீக குணம் (தேவ ), அசுரகுணம் ( தானவ) என்ற இரண்டுமே மனிதனுள் இருக்கின்றன; தற்போது அசுர குணம் ஆட்சி புரிகிறது !எனவே தான் மனிதர்கள் தங்களது காந்தி,சக்தி மற்றும் பெருமையை இழந்து விட்டார்கள் ! நீங்கள் ஒவ்வொருவரும்,ஆன்மீக சாதனையின் மூலம், பாடுபட்டு அவற்றைத் திரும்பப் பெற வேண்டும்.எனவே,இடையறாத முயற்சியின் மூலம் உங்களை, நீங்களே தூய்மைப் படுத்திக் கொள்ளுங்கள்.இந்த உலகம் விரைந்தோடிவிடும் சந்தோஷத்தை மட்டுமே தர முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டிருங்கள்;துன்பம் ,இன்பத்தின் மறுபக்கமே அன்றி வேறில்லை. இப்போதே, இத்தருணத்திலிருந்தே பாடுபடுங்கள்;முழுமையான, நிரந்தரமான ஆனந்தத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கே நீங்கள் உண்மையானவர்களாக இருங்கள். தைரியத்துடன் உங்களது இலட்சியத்திலேயே குறியாக இருங்கள்; உங்களது ஆன்மீக சாதனையில் இன்றிலிருந்து சிரத்தையுடன் இருங்கள்; ஏனெனில் காலம் பாய்ந்தோடி விடும் ஒரு வெள்ளம் போல ஓடிக் கொண்டிருக்கிறது.
எவ்வாறு பழத்தில் சுவையான ரசம் உள்ளதோ,பாலில் வெண்ணெய் உள்ளதோ ,மலரில் நறுமணம் உள்ளதோ, விறகில் நெருப்பு உள்ளதோ, அவ்வாறே தெய்வீகம் இந்தப் பரந்த பிரபஞ்சத்தில் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ளது - பாபா