azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 27 Jan 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 27 Jan 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

God only wants the flower of your heart that is filled with humility and devotion. Eight types of flowers can be offered to God, namely, (1) Non-violence(Ahimsa),(2) Control of senses(Indriya Nigraha),(3) Compassion towards all beings(Sarva Bhuta Dhaya),(4) Truth(Satyam),(5) Meditation(Dhyanam),(6) Peace(Shanti),(7) Humility(Vinaya)and (8) Devotion(Bhakti).In the Bhagavad Gita, Krishna has referred to‘Pathram, Phalam, Pushpam, Thoyam’(leaf, fruit, flower or water) that can be offered to God. 'Pathram' means offering yourself as a leaf. Flower is your heart,‘Hridaya Pushpam’. 'Phalam'is the fruit of your mind.'Thoyam'refers to the tears of joy welling up within you from a sincere and prayerful heart. God is pleased when any one of these is offered with sincere devotion. (Divine Discourse, 19 Jan 1983.)
பணிவும், பக்தியும் நிரம்பிய இதயம் எனும் மலரைத் தான் இறைவன் விரும்புகிறான்.எட்டு விதமான மலர்களை இறைவனுக்கு சமர்ப்பிக்கலாம், அவையே -1) அஹிம்ஸை, (அஹிம்ஸா) 2) புலனடக்கம் ( இந்த்ரிய நிக்ரஹம்) 3)அனைத்து ஜீவராசிகளிடத்தும் கருணை ( ஸர்வ பூத தயா) 4) சத்யம் ( ஸத்யம்) 5) தியானம் ( த்யானம்) 6) சாந்தி ( ஸாந்தி) 7) பணிவு ( வினயம்) மற்றும் 8) பக்தி. ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ''பத்ரம்,புஷ்பம்,பலம்,தோயம் '' ( ஒரு இலை, ஒரு மலர், ஒரு பழம், சிறிது நீர்) ஆகியவற்றை இறைவனுக்கு அர்ப்பணம் செய்யலாம் என்று குறிப்பிடுகிறார். '' பத்ரம் '' என்றால் உங்களையே நீங்கள் ஒரு இலையாக அர்ப்பணம் செய்வது என்று பொருள். மலர் என்பது உங்கள் இதயமே '' ஹ்ருதய புஷ்பம் ''. '' பலம்'' ( பழம் ) என்பது உங்களது மனம். ''தோயம்'' என்பது சிரத்தை மற்றும் வழிபாடு நிறைந்த இதயத்திலிருந்து, உங்களுள் ஊற்றெடுக்கும் ஆனந்தக் கண்ணீரைக் குறிக்கிறது. இவைகளில் ஏதாவது ஒன்றை, மனமார்ந்த பக்தியுடன் அர்ப்பணம் செய்யும் போது இறைவன் மகிழ்ச்சி அடைகிறான்.