azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 26 Jan 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 26 Jan 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
There are four components in the term ‘Ceiling on Desires.’ They are - curb on excessive talk, curb on excessive desires and expenditure, control of consumption of food, check on waste of energy. You need some essential commodities for your sustenance. You should not aspire for more. Learn a lesson in this respect from Nature. Only if air is available in sufficient quantity will it be comfortable and good. If it is excessive and there is a gale you will feel uncomfortable. When you are thirsty, you can consume only a limited quantity of water. You can't consume the entire Ganga! Doctors know that the body temperature is normally 98.4. If this goes up to 99 they say fever has set in due to some disorder in the body. So you find that if you cross the limits even to a little extent it is dangerous or harmful. (Divine Discourse, 19 Jan 1983.)
''ஆசைகளுக்கு வரம்பு'' என்பதில் நான்கு அம்சங்கள் உள்ளன. அவையே- அதிகமான பேச்சைக் குறைப்பது, அதிகமான ஆசைகளையும், செலவுகளையும் குறைப்பது,உணவு உட்கொள்ளுவதில் கட்டுப்பாடு,சக்தியை விரயம் செய்வதைத் தடுப்பது. நீங்கள் வாழ்வதற்கு உங்களுக்கு சில பொருட்கள் அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றன. நீங்கள் அதற்கு மேல் ஆசைப்படக் கூடாது. இதற்கான ஒரு பாடத்தை இயற்கையிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். தேவையான அளவு காற்று இருந்தால் மட்டும் தான் அது நல்லதாகவும் சௌகரியமானதாகவும் இருக்கும். அது மிகுதியாகி,சூறாவளியாக இருந்தால், நீங்கள் அவதிப்படுகிறீர்கள்.உங்களுக்கு தாகம் எடுத்தால், உங்களால் ஒரு குறிப்பிட்ட அளவு தான் நீர் அருந்த முடியும். கங்கை அனைத்தையும் உங்களால் குடிக்க முடியாது ! உடலின் வெப்பம் சாதாரணமாக 98.4 டிகிரி என்பதை மருத்துவர்கள் அறிவார்கள். அது 99 ஆக ஆனால், உடலில் ஏதோ கோளாறினால்,ஜூரம் வந்துள்ளது என்பார்கள். எனவே, நீங்கள் ஒரு சிறிதளவு வரம்பை மீறினாலும்,அது அபாயகரமானது அல்லது தீங்கு விளைவிப்பது என்பதைப் பார்க்கிறீர்கள்.