azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 25 Jan 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 25 Jan 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

The greatness of an individual depends on the cultural perfection attained. ‘Culture’ does not connote mere diligence. It means the removal of evil thoughts and propensities, and the promotion of good thoughts and qualities. It is important that young students live a life characterised by peace and self-control so that they will have a peaceful and contented life later as a citizen. Human life is comparable to a tree and the kinsmen of the individual to its branches. On these branches the flowers of thoughts and feelings blossom. These flowers gradually develop into fruits of good qualities and virtues. The nectarine juice present in these fruits is character. Without roots and fruits, a tree is mere firewood. Self-confidence is the root of the tree of life and character, its fruit. With the hope that you will all become exemplary citizens, purify your hearts and reform society, I bless you all. (Summer Showers, Jan 1979, Ch 1.)
ஒரு தனி மனிதனின் மகத்துவம் அவர் அடைந்துள்ள கலாசார பூரணத்துவத்தைப் பொறுத்தே இருக்கிறது. கலாசாரம் என்றால் வெறும் புத்திசாலித்தனத்தை மட்டும் குறிப்பதல்ல.இதன் பொருள் தீய எண்ணங்கள் மற்றும் குணங்களை விடுத்து, நல் எண்ணங்களையும் , குணங்களையும் வளர்த்துக் கொள்வதாகும்.மாணவ இளைஞர்கள் பிற்காலத்தில் நல்ல குடிமகன்களாக அமைதியான மற்றும் திருப்தியுடைய வாழ்க்கை வாழ்வதற்கு, தற்போது சாந்தியும், புலனடக்கமும் கொண்ட வாழ்க்கையை நடத்துவது மிகவும் அவசியம். மனித வாழ்க்கையை ஒரு மரத்திற்கும், சக மனிதர்களை அதன் கிளைகளுக்கும் ஒப்பிடலாம். இந்த கிளைகளில் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் மலர்கள் மலருகின்றன.இந்த மலர்கள் படிப்படியாக நற்குணங்கள் கொண்ட கனிகளாக உருவெடுக்கின்றன.இந்தக் கனிகளில் உள்ள அமிர்த மயமான பழச்சாறே நல்லொழுக்கம். வேர்களும், பழங்களும் அற்ற மரம் வெறும் விறகே.வாழ்க்கை எனும் மரத்தின் ஆணி வேர் தன்னம்பிக்கை மற்றும் நல்லொழுக்கமே அதன் கனிகள்.நீங்கள் அனைவரும் தலைசிறந்த குடி மகன்களாக உருவெடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் இதயங்களைத் தூய்மைப் படுத்திக் கொண்டு, இந்த சமுதாயத்தையும் சீர்ப்படுத்துங்கள்; உங்கள் அனைவரையும் நான் ஆசீர்வதிக்கிறேன்.