azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 19 Jan 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 19 Jan 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
![Beloved Bhagawan Sri Sathya Sai Baba](/baba/2015/01-2015/htmls/photos/TFD 19.01.2015/baba1.jpg)
All your actions must be aimed at purifying your minds and hearts to experience the Divine. When the heart is pure, the light of wisdom shines. The illumined heart becomes the receptacle of pure love. A person without love is a living corpse. Love is not the relationship between man and woman, or between man and other objects. It is the inherent life-force in every being. "I am the Spirit immanent in all beings(Mamaatma Sarvabhootaatma)”.The Divine Self is present in all beings and has no form. It is experienced as Love. Love is our lifebreath, our soul! Young and old alike, must cultivate steady, unchanging, and unwavering love. All of you must be filled with a sense of selfless dedication, arising from service to others (seva) in which there is no egoistic pride. Revel in giving rather than receiving. (Divine Discourse, 6 May 1985.)
உங்களது அனைத்து செயல்களும்,இறைவனை உணரும் பொருட்டு, உங்கள் மனங்களையும்,இதயங்கைளயும் தூய்மைப் படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும்.இதயம் தூய்மையாக இருக்கும் போது,ஞானஒளி அதில் பிரகாசிக்கும். ஞானஒளி ஊட்டப் பட்ட இதயம் தூய அன்பிற்குப் பாத்திரமாகிறது.அன்பற்ற மனிதன் நடைப்பிணமே. அன்பு என்பது ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையிலோ அல்லது ஒரு மனிதனுக்கும் மற்ற பொருட்களுக்கும் இடையிலோ உள்ள உறவல்ல.அது ஒவ்வொரு ஜீவராசிக்குள்ளும் உறையும் ப்ராணனாகும். ''அனைத்து ஜீவராசிகளுக்கு உள்ளும் உறையும் ஆத்மா நானே''(மமாத்மா ஸர்வபூதாத்மா). பரமாத்மா அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உறைபவன்; அவன் உருவமற்றவன். அவனை அன்பாகவே உணர முடியும்.அன்பே நம் உயிர் மூச்சு, நமது அந்தராத்மா !இளைஞரும் முதியோரும் ஒன்று போல, நிலையான, மாறாத, அலைபாயாத அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிறருக்கு ஆற்றும், எந்த விதமான அஹங்கார அகம்பாவம் அற்ற சேவையிலிருந்து, எழும் தன்னலமற்ற அர்ப்பணிப்பு உணர்வால் நீங்கள் அனைவரும் நிரம்பி இருத்தல் வேண்டும். பெறுவதை விட, கொடுப்பதில் உவகை கொள்ளுங்கள்.