azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 06 Jan 2015 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 06 Jan 2015 (As it appears in 'Prasanthi Nilayam')

In ancient times, sages who performed severe penance to realise the Ultimate Reality, experienced Him and declared that the Supreme Lord is beyondTamas.This means, to experience the Lord we must get rid of ourTamo-guna(the darkness of ignorance). The Lord is beyond the veil ofTamas.When the veil is removed, the Lord can be seen. If one is filled with Tamo-guna from head to foot, how can they experience God? You have a mountain of desires in your heart; you offer a petty coconut to the Lord! Is this love? Is this devotion? No! It is not the way to pray to the Lord. To seek a favour is not prayer at all. On the contrary, the person filled with selfless love will accomplish anything in life, and is ever ready to make any sacrifice. You are God. Get rid of your body consciousness, and you will realise your Divinity. Develop the qualities of love and sacrifice. (Divine Discourse, 1 Jun 1970.)
You too must subject yourself to the hammer of discipline and the chisel of pain-pleasure, so that you become Divine. – Baba
பண்டைய காலத்தில் பரப்ரம்மத்தை உணர வேண்டி, கடுந்தவம் புரிந்த முனிவர்கள், அவனை அனுபவித்து,பரம்பொருளான இறைவன் '' தமஸ்'' என்ற அறியாமைக்கு எல்லாம் அப்பாற்பட்டவன் என்று பறை சாற்றினார்கள்.இதன் பொருள்,இறைவனை உணர வேண்டும் என்றால், நாம் நமது அறியாமை எனும் இருளைப் ( தமோ குணத்தை ) போக்க வேண்டும் என்பதாகும். ''தமஸ்'' எனும் திரைக்கு அப்பாற்பட்டவன் இறைவன். இந்தத் திரையை நீக்கி விட்டால், இறைவனைக் காண முடியும்.தலை முதல் கால் வரை தமோ குணம் நிறைந்த ஒருவர், இறைவனை எவ்வாறு காண இயலும்? உங்கள் இதயத்தில் மலை அளவு ஆசைகளை வைத்துக் கொண்டு, வெறும் ஒரு தேங்காயை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறீர்கள் ! இதுதான் ப்ரேமையா ? இதுவா பக்தி ? இல்லை! இறைவனை வழிபடும் முறை இதுவல்ல.ஒரு சலுகை வேண்டி பிரார்த்திப்பது, ப்ரார்த்தனையே அல்ல.அதே சமயம், தன்னலமற்ற ப்ரேமை நிறைந்த ஒருவர் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்; அவர் எப்போதும் எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருப்பார்.நீங்களே இறைவன். உங்களது உடல் பற்றை விட்டு விடுங்கள்;தெய்வீகத்தை உணர்வீர்கள். அன்பு மற்றும் தியாகம் என்ற குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
நீங்களும் உங்களையே கட்டுப்பாடு என்ற சம்மட்டிக்கும்,இன்ப-துன்பங்கள் என்ற உளிக்கும் ஆளாக்கிக் கொள்ள வேண்டும்;அப்போது தான் நீங்களே இறைவனாகி விடுவீர்கள்.- பாபா