azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 28 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 28 Dec 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

A cleansed and pure heart is the most appropriate altar or tabernacle for the Lord. In that fragrant bower, the Lord will establish Himself. When the Lord establishes Himself, at that very moment, another incident too will happen. The group of six vices that had infested the place will quit instantly, without any farewell or fanfare. When these vices quit, the wicked retinue of evil tendencies and vulgar attitudes which live on them will break camp and disappear without leaving even their addresses! Then one will shine in one's native splendour of Truth and Love(Sathya and Prema).That person will endeavour without hindrance to realize the Self, and finally succeed in merging with the Universal and Eternal. Liberated from the tangle of ignorance ormaya, the mind will fade away. The long-hidden secret will be revealed. ( Bhagavatha Vahini, Ch 1, 'The Bhagavatha'.)
சுத்தம் செய்யப் பட்ட தூய்மையான இதயமே இறைவன் கொலு வீற்றிப்பதற்குப் பொருத்தமான ஸன்னிதானமாகும்.அந்த நறுமண அலங்காரப் பந்தலில் இறைவன் தன்னையே ஸ்தாபித்துக் கொள்வான். இறைவன் அவ்வாறு நிலை கொள்ளும் அதே தருணத்தில் மற்றொரு நிகழ்வும் நடக்கும்.அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த ஆறு விதமான துற்குணங்களும், ஆரவாரமின்றி அடுத்த நொடியே அகன்று விடும்.இந்த துற்குணங்கள் அகன்று விடும்போது, அங்கு குடி கொண்டிருந்த தீய உணர்வுகள் மற்றும் கீழ்த்தரமான மனப்பாங்குகளின் பரிவாரங்கள், தங்கள் படுக்கைகளைச் சுருட்டிக் கொண்டு, விலாசத்தைக் கூடக் கூறாமல் பறந்தோடிவிடும் !பின்னர் ஒருவர் தனது இயல்பான சத்தியம் ம்றறும் ப்ரேமையின் காந்தியில் ஒளிர் விட்டு ப்ரகாசிப்பார். அந்த மனிதர் எந்தத் தங்கு தடையும் இன்றி தன்னை உணருவதற்காக முயன்று,இறுதியில் அந்த பரம்பொருளுடன் ஒன்றரக் கலந்து விடுவார். மாயையின் வலைகளிலிருந்து விடுபட்ட மனம் மங்கி மறைந்து விடும். பல காலமாக ஒளித்து வைக்கப் பட்டிருந்த பரம(னின்) ரகசியம் வெளிப்படும்.