azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 14 Nov 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 14 Nov 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

You have immense potency within you. Like the light that illumines, your vision must be pure, sacred and pleasing. Do not taint or pollute the blessing of sight by looking at undesirable objects, or by looking with bad thoughts. A magnetic energy circulates in you. Although this energy is present throughout the body, its presence is conspicuous in the hand. Hence the hands should be employed for good purposes. They should never be used for harming others. The ears listen to gossip, slander and evil talk. The result is that the power of hearing gets polluted. Also the power of speech. This power finds expression in sound waves and it has to be used with great care. The words one utters should be examined to see that they do not excite, irritate or anger others. Bad words come back to the speaker with double strength. Hence one's speech should be soft and sweet. (My Dear Students, Vol 5, Ch 14, 14 Jan 1996.)
Parents have the primary responsibility to mould the character of children. Out of excessive affection they should not give too much freedom. - Baba
உங்களுள் அளவற்ற ஆற்றல் உள்ளது.ஒளியூட்டும் விளக்கைப் போல, உங்களது திருஷ்ட்டி தூய்மையானதாகவும்,புனிதமானதாகவும் மேலும் இனிமையானதாகவும் இருக்க வேண்டும். உங்களது திருஷ்ட்டி என்ற ஆசியை, வேண்டாத விஷயங்களைப் பார்ப்பது அல்லது தீய எண்ணங்களுடன் பார்ப்பது போன்றவற்றால், களங்கப் படுத்தவோ அல்லது மாசுபடுத்தவோ செய்யாதீர்கள்.உங்களுள் ஒரு ஜீவ காந்த சக்தி ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த சக்தி உங்கள் உடல் முழுவதும் பரவியிருந்தாலும், அவை இருப்பது கைகளில் தான் அதிகம் வெளிப்படுகிறது. எனவே, கைகள் நல்ல விஷயங்களுக்கே பயன்படுத்தப் பட வேண்டும். அவைகளை ஒரு போதும் பிறருக்குத் தீங்கு இழைப்பதற்காகப் பயன்படுத்தக் கூடாது.காதுகள் வம்பு,அவதூறு மற்றும் தீய பேச்சுக்களைக் கேட்கின்றன. இதன் பலனாகக் கேட்கும் சக்தி மாசடைந்து விடுகிறது.மேலும் பேச்சின் சக்தியை எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த சக்தி,ஒலி அலைகளாக வெளிப்படுவதால், இதை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். ஒருவர் பேசும் வார்த்தைகள்,மற்றவர்களது உணர்ச்சிகளைக் கிளறாமலும், எரிச்சலூட்டாமலும், ஆத்திரமூட்டாமலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தீய வார்த்தைகள்,அதைச் சொல்பவரிடமே இரட்டிப்பு வேகத்துடன் திரும்பி வரும்.எனவே, ஒருவரது பேச்சு இதமானதாகவும், இனிமையானதாகவும் இருக்க வேண்டும்.
குழந்தைகளின் குணாதிசியங்களை உருவாக்குவதில் பெற்றோர்களுக்கு தலையாய கடமை உள்ளது.அளவற்ற பாசத்தின் காரணமாக,அவர்களுக்கு அதிகமான சுதந்திரம் தரக் கூடாது.- பாபா