azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 16 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 16 Aug 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
In ancient times, the sages performed rigorous penance in the forests, living among wild animals. With no weapons in their hands, they relied on their spirit of love to protect them. They performed their penance with love for all beings. Their love transformed even the wild animals to be at peace with the sages. Love transformed even tigers into friendly beings. People in those days had soft and loving hearts. Thus since time immemorial, love has been serving as a powerful force to transform one's nature from the animal to the human. Today because people have lost the feeling of love, they are filled with selfishness and greed. It is to teach mankind the truth about this Divine Love that Love itself incarnates on earth in human form. The scriptures declare that the Divine descends on earth to teach mankind the path of Righteousness, Truth and Love.(Divine Discourse, Sep 02, 1991.)
Injuring or Hurting or Causing harm to another is a sign of animality. - Baba
பண்டைய காலத்தில் முனிவர்கள் காடுகளில் ,கொடிய மிருகங்களுக்கு இடையில் வாழ்ந்து,கடும் தவம் புரிந்தார்கள்.தங்களது கரங்களில் எந்த ஆயுதமும் இன்றி,அவர்கள், தங்களைக் காத்துக் கொள்ள, தங்களது ப்ரைமை உணர்வையே நம்பி இருந்தனர்.அனைத்து ஜீவராசிகளின் மீது ப்ரேமை வைத்து, அவர்கள் தவம் புரிந்தனர்.அவர்களது ப்ரேமை கொடிய மிருகங்களைக் கூட முனிவர்களுடன் சாந்தியுடன் இருக்கும் அளவிற்கு மாற்றத்தை உண்டாக்கியது.ப்ரேமை, புலிகளைக்கூட, நட்புணர்வு கொண்ட ஜீவன்களாக மாற்றி விட்டது.மனிதர்கள் அந்நாளில்,மிருதுவான, ப்ரேமை கொண்ட இதயங்களைப் பெற்றவர்களாக இருந்தார்கள்.இவ்வாறு ஆதி காலம் தொட்டே, ப்ரேமையே ஒருவரை, அவரது மிருக குணத்திலிருந்து மனித குணம் கொண்டவராக மாற்றும், வலிமையான சக்தியாக பணியாற்றி வருகிறது. இன்று மனிதர்கள் ப்ரேமை உணர்வை இழந்து விட்டதால், சுயநலமும், பேராசையும் நிறைந்தவர்களாக ஆகி விட்டார்கள்.இந்த தெய்வீக ப்ரேமையின் சத்தியத்தை மனித குலத்திற்கு புகட்டுவதற்காகவே, இந்த புவியில்,ப்ரேமையே மனித உருவில் அவதாரம் எடுத்து வருகிறது.மறை நூல்கள், இறைவனே, மனித குலத்திற்கு சத்யம்,தர்மம் மற்றும் ப்ரேமையை புகட்டுவதற்காக அவதாரமாக, இற(ர)ங்கி வருகிறான் என பறை சாற்றுகின்றன.
பிறரை காயப்படுத்துவதோ,அல்லது புண்படுத்துவதோ அல்லது அவர்களுக்குத் தீங்கு இழைப்பதோ மிருக குணத்தின் அடையாளமாகும்- பாபா