azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 20 Jun 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 20 Jun 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Devotion these days appears more as a way of spending one's time rather than as the royal road to the eternal mansion of the Divine. You need not make much effort to grow grass. But to raise a useful crop you have to labour hard. Likewise, it is no great achievement to experience the trivial and transient pleasures of mundane existence; it is like growing grass. You must strive to cultivate the nectarous and lasting bliss of divine Love. Those who aspire for such love are not easy to find. All appear as devotees. But the one who has experienced the Divine Principle will not go after sensuous pleasures. (My Dear Students, Vol 3, Ch 6, Jun 27, 1989.)
பக்தி என்பது இந்நாளில்,நிரந்தர தெய்வீக மாளிகைக்கான ராஜ பாட்டையாக அன்றி, அதிகமாக ஏதோ ஒரு பொழுது போக்கு போலத் தோன்றுகிறது. புல்லை வளர்ப்பதற்கு நீங்கள் அதிக முயற்சி எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.ஆனால் பயனுள்ள ஒரு பயிரை வளர்க்க நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அதைப் போலவே,அற்பமான,கண நேரத்தில் தோன்றி மறையும் உலக இன்பங்களை அனுபவிப்பது என்பது பெரிய சாதனை அல்ல; அது புல்லை வளர்ப்பதைப் போன்றது. நீங்கள் அமிர்த மயமான ,நிலையான தெய்வீக ப்ரேமையின் ஆனந்த்தத்தை வளர்த்துக் கொள்ளப் பாடு பட வேண்டும். இப்படிப் பட்ட ப்ரேமைக்காக ஏங்குபவர்களைக் காண்பது அரிது. அனைவரும் பக்தர்களைப் போன்றே தோன்றுவார்கள். ஆனால் தெய்வீக தத்துவத்தை அனுபவித்தவர்கள் புலனின்பங்களை நாடிச் செல்ல மாட்டார்கள்.