azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 19 Jun 2014 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 19 Jun 2014 (As it appears in 'Prasanthi Nilayam')

Never forsake your parents till your last breath. Even if they didn’t provide for all you asked and wished, you must love them. Your mother has undergone many hardships for your sake. She nourished you in many ways. Forgetting or ignoring your mother is the worst of sins. Father has worked hard to take care of you and raise you. Never make your parents feel distant from you. Love and respect them at all times. You must satisfy the needs of your parents, using the education they gave you. Their satisfaction will give you infinite joy. Do not believe your friends to be your everything – as long as you have money in your pocket, they are your friends. When you are penniless, most of them will bid goodbye. (My Dear Students, Vol 2, Ch 12, Jun 4, 2009)
உங்கள் பெற்றோர்களை கடைசி மூச்சு வரை கைவிடாதீர்கள்.நீங்கள் கேட்ட, மற்றும் விரும்பிய அனைத்தையும் அவர்கள் அளிக்காமல் இருந்தாலும் கூட, அவர்களை நேசியுங்கள்.உங்கள் தாயார் உங்களுக்காக பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்.உங்களை பல விதமாக போஷித்துக் காத்திருக்கிறார். உங்களது தாயாரை மறப்பதோ அல்லது புறக்கணிப்பதோ மிகக் கொடிய பாவமாகும். தந்தையோ உங்களைப் பேணிக் காத்து, வளர்க்க மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார்.ஒருபோதும் உங்களது பெற்றோர்கள், உங்களை விட்டு விலகி விட்டது போன்ற உணர்வை உண்டாக்காதீர்கள். எல்லாக் காலங்களிலும் அவர்களை நேசித்து, மதியுங்கள்.உங்களது பெற்றோர்கள் உங்களுக்கு அளித்த கல்வியைக் கொண்டு அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள்.அவர்களது திருப்தி, உங்களுக்கு அளவற்ற ஆனந்தத்தை அளிக்கும். உங்களது நண்பர்கள் தான் எல்லாம் என்று எண்ணாதீர்கள்-உங்களது பையில் பணம் இருக்கும் வரைதான் அவர்கள் உங்களது நண்பர்களாக இருப்பார்கள்.உங்கள் கையில் காசில்லை என்றால், அவர்கள் பறந்தோடி விடுவார்கள்.