azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 18 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 18 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

True education means trying to manifest the inner divinity in man. How is this manifestation to be brought about? Students must receive education that illumines every aspect of life - the economic, the political, the moral, the spiritual and the physical, the mental and the social environment of man. It should not be confined to one specific sphere. Many students consider book knowledge as education. This gives them only superficial knowledge. They need practical knowledge which will enable them to lead righteous lives. Education should also result in the purification of the heart. Men and women must be taught to be sincere in thought, word and deed, as a mark of humanness. Students must also revere their parents at all times and promote the cause of social improvement. They must co-operate with all fellow-beings. These are the things all students should learn.(Divine Discourse, Nov 22, 1997.)
மனிதனுள் இருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்த முயல்வதே உண்மையான கல்வியாகும்.இந்த வெளிப்படுதலை எவ்வாறு கொண்டு வருவது?வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும்-பொருளாதாரம்,அரசியல், ஒழுக்கங்கள்,ஆன்மீகம்,உடலியல்,மனம் மற்றும் சமுதாய சூழ்நிலை- விளக்கிக் காட்டும் கல்வியை மாணவர்கள் பெற வேண்டும்.அது ஒரு குறிப்பிட்ட துறையோடு நின்று விடக் கூடாது. பல மாணவர்கள் புத்தக அறிவையே கல்வி என்று கருதுகிறார்கள்.இது அவர்களுக்கு மேலாட்டமான அறிவைத் தான் தருகிறது.தர்மமான வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான நடைமுறை அறிவு அவர்களுக்குத் தேவை.கல்வி இதயத் தூய்மையையும் கூட அளிக்க வேண்டும்.மனித நேயத்தின் அறிகுறியான, எண்ணம்,சொல், மற்றும் செயலில் நேர்மை என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் கற்றுத் தரப் பட வேண்டும்.மாணவர்கள் எல்லாக் காலங்களிலும் பெற்றோரை மதிக்க வேண்டும்;சமூக முன்னேற்றத்தை வளர்க்க வேண்டும்.அவர்கள் அனைத்து சக மனிதர்களுடன் ஒத்துழைக்க வேண்டும்.அனைத்து மாணவர்க்ளும் இந்த விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.