azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 14 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 14 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

A country does not mean a piece of earth. People make a country. And transformation should not be one dimensional. It is the entire process of refinement by which people get rid of their bad thoughts and actions, and cultivate good thoughts and do good acts in daily life. The value of a person is not derived from his or her educational qualifications alone. The cultural refinement of one’s lifestyle is also essential. A life without culture is like a house without light. A person without culture is like a stringless kite, which is tossed hither and thither. An education bereft of culture is worthless like a counterfeit coin. What is meant by culture? It is the realisation of the inherent Divinity in man and making it manifest in one's way of life. (Divine Discourse, Nov 22, 1997.)
ஒரு தேசம் என்றால் ஏதோ பூமியின் ஒரு பகுதி அல்ல.மனிதர்களே ஒரு தேசத்தை உருவாக்குகிறார்கள்.அதே போல மன மாற்றமும் ஒரே ஒரு வழியில் மட்டும் இருத்தல் கூடாது.அது,மனிதர்கள் தங்களது தீய எண்ணங்கள் மற்றும் செயல்களை விட்டு விட்டு,தினசரி வாழ்க்கையில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டு,நற்பணிகளை ஆற்றச் செய்யுமாறு செய்யும் முறை அனைத்தையும் செம்மைப் படுத்துவதே ஆகும். ஒரு மனிதரது மதிப்பு அவன் அல்லது அவளுடைய கல்வித் திறன்களிலிருந்து மட்டுமே எடுத்துக் கொள்ளப் படுவது அல்ல.ஒருவரது வாழும் முறை கலாசாரத்தினால் செம்மைப் படுவதும் அத்தியாவசியமே. கலாசாரமற்ற வாழ்க்கை, ஒளியற்ற வீடு போன்றதே. கலாசாரமற்ற மனிதன் இங்கும் அங்கும் ஊசலாடும்,நூலறுந்த பட்டத்தைப் போன்றவனாவான். கலாசாரமற்ற கல்வி கள்ள நாணயம் போன்று மதிப்பற்றதாகும்.கலாசாரம் என்றால் என்ன?மனிதனுள் உள்ள தெய்வீகத்தை உணர்ந்து,ஒருவரது வாழும் முறையில் அதனை வெளிப்படுத்துவதே ஆகும்.