azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 02 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 02 Dec 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Mud existed before plates and pots were made out of it; pots and plates are mud, and mud will remain when plates and pots are no more. The plate and the pot must be aware of their being always mud; that in other words, is Self-Realisation. When that is achieved, wherever your eyes are cast, you will find yourself; and wherever your attention is directed, you will see your reflection. Begin to feel it now, from this very moment! Seek to identify yourself as part of the grand and glorious Entity, for all Grandeur and all Glory is His, ultimately!(Divine Discourse, Nov 25, 1964.)
தட்டுகளும்,குடங்களும் உருவாவதற்கு முன்பே அவைகள் செய்யப் படும் களிமண் இருந்தது; தட்டுகளும், குடங்களும் களிமண்ணே, அவைகள் இல்லாமல் போனாலும் களிமண் இருந்து கொண்டு தான் இருக்கும்.தட்டும் , குடமும் தாமும் எப்போதும் களி மண்ணே என்பதை உணர்ந்திருக்க வேண்டும், அதுவே ஆத்ம சாக்ஷாத்காரம்.அதைப் பெற்று விட்டால், எங்கெல்லாம் உங்கள் கண் பார்வை படுகிறதோ, அங்கெல்லாம் நீங்கள் உங்களையே காண்பீர்கள்; எங்கெல்லாம் உங்கள் கவனம் ஈர்க்கப் படுகிறதோ, அங்கெல்லாம் நீங்கள் உங்களது பிரதி பிம்பத்தையே காண்பீர்கள்.இதை,இந்தத் தருணத்தில் இருந்தே உணரத் தொடங்குங்கள் !இறுதியில் அனைத்தும் ஆகி, அனைத்துப் போற்றுதலுக்கும் உரிய மகத்தான மற்றும் தலைசிறந்த இறைவனின் ஓர் அங்கமாகவே உங்களைக் கண்டு கொள்ள விழையுங்கள் !