azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 15 Nov 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 15 Nov 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Usually when you are asked where God is, you point to the sky or some distant place of worship and say He is there, as if He is just a person and has a definite place of Residence. Every single individual in the planet is essentially Divine. It is delusion that has induced one who isNaraayana swarupa(embodiment of God) to imagine and behave as if he is just anara(human). To remove that delusion, there are various means suited to the needs of each sufferer. But all the treatment and all the struggle is to achieve the experience of being Naraayana, and discard the limited, bound, and relative entity,nara. That is the one harvest yielded by all the various processes. Until one understands oneself, the delusion and the resultant grief cannot be ended. Make use of this precious opportunity, invest time to understand yourself.(Divine Discourse, Jan 22, 1960.)
சாதாரணமாக,கடவுள் எங்கே என்று கேட்டால்,அவர் ஏதோ ஒரு குறிப்பிட்ட வீட்டைக் கொண்ட வெறும் மனிதர் என்பதைப் போலக் கருதி, நீங்கள் ஆகாயத்தையோ அல்லது வெகு தூரத்தில் உள்ள புனித்தலத்தையோ காட்டி, அவர் அங்கே இருக்கிறார் என்கிறீர்கள். இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொருவரும் இயல்பில் தெய்வீகமே. மாயையே,நாராயண ஸ்வரூபமாக இருக்கும் ஒருவர்,தன்னை வெறும் ஒரு நரனாகக் (மனிதனாக) கருதி அவ்வாறு நடந்து கொள்ளுமாறு செய்கிறது.இந்த மாயையை நீக்க,கஷ்டப்படும் ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ற பல வழிகள் உள்ளன.ஆனால் அனைத்து சிகிச்சை மற்றும் போராட்டங்களும், ஒருவர் ''நரன்'' என்ற தனிப்பட்ட, கட்டுண்ட ஒருவரே என்ற உணர்வைக் களைந்து, தான்,'' நாராயணனே'' என்ற அனுபவத்தை அடைவதற்காகவே. அனைத்து முறைகளும் அளிக்கும் ஒரு பலன் இதுவே.ஒருவர் தன்னைப் புரிந்து கொள்ளும் வரை,மாயையும் அதனால் விளையும் துக்கமும் முடிவுக்கு வர மாட்டா.இந்த (மனிதப் பிறவி என்ற) அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி உங்களை நீங்களே அறிந்து கொள்ள நேரத்தைப் பயன்படுத்துங்கள்.