azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 27 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 27 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Sometimes the cloud of envy and hatred come to darken relationships. This is primarily due to fear; fear that causes anger. The emergence of devotion, and the humility and wisdom resulting from it, will make fear and anger disappear. Anger wastes health, time and character. Never allow it to have a free play. Just like you cultivate the field, you must cultivate the fields of feelings, motives, desires and promptings. People are often ruined because they cannot tolerate the prosperity of another. Most people are bent on pulling down another. Jealousy is the chief cause of ruin and it is born due to the undue importance attached to the body, the senses and the accumulation of objects that cater to the senses. Develop the spirit of mutual help. See things in proper perspective; give everything its worth and no more.(Divine Discourse, Sep 9, 1959)
சில சமயங்களில் பொறாமை மற்றும் வெறுப்பு என்ற கருமேகங்கள் உறவுகளைச் சூழ்ந்து கொள்கின்றன.இது அடிப்படையில் பயத்தினால் ஏற்படுகிறது; பயம் கோபத்தை உண்டாக்குகிறது.மலருகின்ற பக்தியும், அதிலிருந்து வருகின்ற பணிவு மற்றும் ஞானம் ஆகியவை பயம் மற்றும் கோபத்தை நீக்கி விடும். கோபமானது, ஆரோக்யம், காலம் மற்றும் நற்பண்புகளை வீணடிக்கிறது. ஒரு போதும் அதை தன்னிஷ்டப்படி ஆட விடாதீர்கள்.ஒரு விளை நிலத்தை நீங்கள் பண்படுத்துவதைப் போல, நீங்கள் உணர்வுகள்,உத்தேசங்கள்,ஆசைகள் மற்றும் உந்துதல்கள் என்ற நிலத்தைப் பண்படுத்த வேண்டும்.பிறரது வளமையைப் பொறுத்துக் கொள்ள முடியாததால், பலர் சீரழிந்து போகிறார்கள்.பெரும்பாலானவர்கள் மற்றவர்களை தாழ்த்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.பொறாமையே அழிவிற்கான முக்கியமான காரணம்; உடல், புலன்கள் மற்றும் புலன்களுக்குத் தீனி போடும் பொருட்கள் ஆகியவற்றின் மீது,தேவைக்கு அதிகமான பற்றுதல் வைப்பதனால் தான் பொறாமை பிறக்கிறது.ஒருவருக்கு ஒருவர் உதவும் உணர்வை உருவாக்கிக் கொள்ளுங்கள். அனைத்தையும் சரியான கண்ணோட்டத்துடன் காணுங்கள்;ஒவ்வொன்றிற்கும்,அதிகமாக அல்லாது, அவற்றிற்குத் தகுதியான அளவே மதிப்பு அளியுங்கள்.