azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 17 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 17 Oct 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Just as underground water is the sustenance of all trees, theAtmais the underlying source of all the bliss that the individual experiences. The process of digging a borewell to bring the underground water to surface level involves steady hitting, digging, and thumping through a pipe which holds and directs the drill. The people who do the boring take a lot of care to ensure that air does not go into the pipe, for then the drilling process becomes unsuccessful. FInally through a lot of effort, you bring the subterranean water to the surface level for human consumption. So too, you must undertake the repetition of the Lord’s Name (Japam) very intensely taking care that you do not allow the attachment to worldly objects (Vishaya vasana) to enter and interfere with the process.(Divine Discourse, Oct 16, 1964.)
எப்படி நிலத்தடி நீர் அனைத்து மரங்களுக்கும் வாழ்வாதாரமாக உள்ளதோ, அதைப் போலவே,ஒரு தனி மனிதன் அனுபவிக்கும் அனைத்து ஆனந்தங்களின் ஆதாரமாக ஆத்மா விளங்குகிறது. நிலத்தடி நீரை மேலே கொண்டு வருவதற்கான, ஆழ்குழாய் கிணறு தோண்டுவதற்கு, துளைகருவியைப் பிடித்துக் கொண்டு வழி நடத்தும் குழாயினால் விடாமல் அடித்து,தோண்டி, இடிக்க வேண்டும்.இந்தப் பணியில் ஈடுபவர்கள்,அந்தக் குழாயினுள், காற்று புகுந்து விடாமல் தடுப்பதில், மிகவும் கவனமாக இருப்பார்கள்; ஏனெனில் பின்னர்,இந்தத் துளைப் பணி தோல்வியடைந்து விடும். இறுதியில்,மிகுந்த முயற்சிக்குப் பின்,நீங்கள் நிலத்தடி நீரை மனிதர்களுக்குப் பயன்படும் வண்ணம் மேலே கொண்டு வருகிறீர்கள். அதைப் போலவே,நீங்களும், உலகியலானவற்றின் மீது வைக்கும் பற்றுதல்கள் உள் நுழைந்து இந்த முயற்சிக்கு இடையூறு விளைவிக்காமல் இருப்பதில் கவனம் செலுத்தி, இறை நாம ஜபத்தை, தீவிரமாக செய்ய வேண்டும்.