azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 21 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 21 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

All the effort and investment you expend in pursuing the scriptures and noble thoughts are a sheer waste, if study and reflection do not help you to recognize that the mind is worse than a drunken monkey. Pilgrimages are for elevating the heart, sublimating the impulses and leading the lower self to higher levels of thought and action. Reason serves the same purpose, or at least, it ought to. Reason seeks to know the unity of the universe, the origin and the goal of all of it. Through reason, you should understand the laws that govern the microcosm (anu) and the macrocosm (Bruhath). It peeps behind the ever receding curtain to get a glimpse of the Puppeteer (Suthradhari) who pulls the strings.(Divine Discourse, Apr 12, 1959.)
அவற்றைப் படித்து,ஆலோசிப்பதன் மூலம் மனம் ஒரு மதம் பிடித்த குரங்கை விட மோசமானது என்பதை நீங்கள் உணருவதற்கு உதவி புரியாவிட்டால், சாஸ்திரங்கள் மற்றும் சீரிய எண்ணங்களைப் பின்பற்ற நீங்கள் செலவழிக்கும் அனைத்து முயற்சி மற்றும் மூலதனமும் வெறும் வீணே.தீர்த்த யாத்திரைகள் இதயத்தை மேம்படுத்தி, உணர்ச்சிகளை சீர்படுத்தி,கீழ்த்தரமானவற்றை, உயர்ந்த எண்ணங்கள் மற்றும் செயல்களுக்குக் கொண்டு செல்வதற்காக அமைந்துள்ளன. பகுத்தறிவும் அதே குறிக்கோளைத் தான் கொண்டுள்ளது; அப்படித் தான் அது இருக்க வேண்டும். பகுத்தறிவு இந்தப் பிரபஞ்சத்தின் ஒற்றுமை, அதன் மூலம் மற்றும் இவை அனைத்தின் குறிக்கோள் ஆகியவற்றை அறிய விழைகிறது. பகுத்தறிவின் மூலம், நீங்கள் அணு மற்றும் அண்டசராசரத்தை முறைப் படுத்துகின்ற விதிளைப் புரிந்து கொள்ள வேண்டும். அது , பின்னால் இருந்து அனைத்துக் கயிறுகளையும் இயக்குகின்ற சூத்ரதாரியின்( இறைவனின் ) ஒரு சிறு காட்சியைப் பெற, பின்னோக்கிப் போய்க் கொண்டே இருக்கும் திரைக்குப் பின்னால் எட்டிப் பார்க்க முயல்கிறது.