azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 02 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 02 Aug 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Parents and teachers must see that children learn good habits and attitudes in their formative years. What is read from books must be contemplated upon and reflected upon in silence and quietness. This is a very good exercise in intellectual development and in the acquisition of mental peace. The instinct to quarrel and fight over any and all misunderstandings must be regulated and sublimated. You should not cause children to suffer mental anguish or physical pain! Children also should not enjoy the infliction of pain on any being. They must be brought up with a sense of responsibility. They should be taught not to take delight in showing off their dress, ornaments, status or wealth before the less fortunate. They must be taught from early on, habits of personal cleanliness and most importantly, the habit of prayer at regular hours.(Divine Discourse, Sep 3, 1958.)
பெற்றோர்களும்,ஆசிரியர்களும்,குழந்தைகள் சிறு பிராயத்திலிருந்தே, நல்ல பழக்கங்கள் மற்றும் மனப்பாங்குகளைக் கற்றுக் கொள்ளுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.புத்தகங்களில் படித்தவற்றைச் சிந்தித்துப் பார்த்து, அமைதியாகவும்,நிசப்தமாகவும் அவற்றை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஏதாவது அல்லது அனைத்து தவறான புரிந்து கொள்வதற்கும் சண்டை போடும் உள்ளுணர்வை கட்டுப் படுத்தி, சீர்படுத்த வேண்டும்.குழந்தைகள் மனத் துயரம் அல்லது உடல் வலியால் வருந்துமாறு, நீங்கள் செய்யக் கூடாது. குழந்தைகளும் எவரையும் காயப்படுத்தி மகிழக் கூடாது.. அவர்களை பொறுப்புணர்வுடன் வளர்க்க வேண்டும்.தங்களது உடை, ஆபரணங்கள், செல்வம் அல்லது தரத்தை அவர்களை விடத் தாழ்ந்து இருப்பவர்கள் முன்னால் காட்டி மகிழ்வதைச் செய்யாதிருக்குமாறு, அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.சிறு வயதிலிருந்தே தங்களது சுகாதாரத்திற்கான பழக்கங்கள் மேலும் அனைத்திலும் முக்கியமாக, முறையான நேரங்களில் பிரார்த்தனை செய்யும் பழக்கத்தை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.