azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 02 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 02 Jun 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Show deep gratitude to your parents. Tend to them with respect and adore them. On their anniversary of passing away, remember them and pay the tribute of at least a tear. Do it with faith (Shraddha), hence it is called Shraardha (religious ceremonial offering to the dead), note that they are not waiting for them in the other world! This tribute you offer should be in gratitude for the great chance they gave you for this sojourn in this world with all the wonderful opportunities it offers for self-realization. By the same token, parents must feel that they are servants appointed by the Lord to tend the little souls that are born in their households as the gardener tends the trees in the garden of the Master. Give children every opportunity and facility to develop their innate divine talents. Arouse the latent goodness in their tiny hearts through stories of saints and sages. Without fear, make them brave to practice righteousness.(Divine Discourse, Jul 25, 1958.)
உங்கள் பெற்றோர்களிடம் ஆழ்ந்த நன்றியைக் காட்டுங்கள்.அவர்களை கண்ணியத்துடன் பேணிப் போற்றுங்கள்.அவர்களது மறைந்த தினத்தன்று அவர்களை நினைவு கூர்ந்து, ஒரு சொட்டுக் கண்ணீராவது சிந்தி அவர்களுக்கு அஞ்சலி செலுத்துங்கள்.ஸ்ரத்தையுடன் அதைச் செய்யுங்கள்; அதனால் தான் அதற்கு ஸ்ரார்த்தம் எனப் பெயர் வந்ததே அன்றி, அவர்கள் ஏதோ மற்றொரு உலகத்தில், இதற்காகக் காத்துக் கொண்டு இருக்கவில்லை என்பதைக் கவனியுங்கள்.தன்னை உணர்வதற்கான, பல சிறந்த வாய்ப்புக்களோடு கூடிய இந்த உலகில், வந்து வாழும், மிகச் சிறந்த சந்தர்ப்பத்தை, அளித்ததற்காக நன்றியுடன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துங்கள். அதே சமயம், எஜமானரது தோட்டத்தில் இருக்கும் மரங்களைப் பராமரிக்கும் தோட்டக்காரனைப் போல, பெற்றோர்களும், தங்களது இல்லங்களில் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்காக இறைவனால் அமர்த்தப் பட்ட சேவகர்களைப் போல தங்களைக் கருத வேண்டும். குழந்தைகள் தங்களுள் மறைந்திருக்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான எல்லா வாய்ப்பு, வசதிகளையும் அவர்களுக்கு அளியுங்கள். அவர்களது சிறு இதயங்களில் புதைந்திருக்கும் நல்லனவற்றை ஆன்றோர்களின் கதைகளின் மூலம் தட்டி எழுப்புங்கள். அச்சமின்றி, அவர்கள் தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்கு தைரியம் உள்ளவர்களாக அவர்களை ஆக்குங்கள்.