azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 03 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 03 May 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
So long as you have a trace of ego in you, you cannot see the Lord clearly. Ego is the curtain which even noble saints ask the Lord to remove from their minds. Egoism will be destroyed, if you constantly tell yourself, “It is He, not I”. “He is the force, I am but the instrument.” Keep His Name always on the tongue, contemplate His glory whenever you see or hear anything beautiful or grand; see in everyone the Lord Himself. Do not talk ill of others, see only good in them. Welcome every chance to help, console and to encourage others along the spiritual path. Be humble. Never become proud of your wealth, status, authority, learning or caste. Dedicate all your physical possessions, mental skills and intellectual attainments to the service of the Lord and His Glory.(Divine Discourse, Aug 13, 1964.)
உங்களுள் அஹங்காரத்தின் ஒரு சிறு அடிச்சுவடு இருக்கும் வரை, உங்களால் இறைவனைத் தெளிவாகக் காண இயலாது. சீரிய ஆன்றோர்கள் கூட, அவர்கள் மனங்களில் இருந்து அதை அகற்றுமாறு இறைவனை வேண்டுவது அஹங்காரம் எனும் திரையைத் தான். நீங்கள் இடையறாது உங்களுக்கே, '' அது இறைவனே, நான் அல்ல '' எனவும் '' அவனே சக்தி, நான் ஒரு கருவி மட்டுமே'' எனக் கூறிக் கொண்டு வந்தால் அஹங்காரம் அழிக்கப் படும். இறை நாமத்தை எப்போதும் நாவில் கொள்ளுங்கள்; சௌந்தர்யமான அல்லது பிரம்மாண்டமான எதைக் கண்ட அல்ல கேட்ட போதும், அவனது மஹிமையைத் தியானம் செய்யுங்கள்; ஒவ்வொருவரிலும் இறைவனையே காணுங்கள். பிறரைப் பற்றி அவதூறாகப் பேசாதீர்கள், அவர்களிடம் உள்ள நல்லவற்றையே காணுங்கள். பிறர் ஆன்மீகப் பாதையில் செல்வதற்கு உதவ,தேறுதல் கூற மற்றும் உற்சாகம் அளிக்கக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பினையும் வரவேறுங்கள். பணிவுடன் இருங்கள். உங்கள் ஆஸ்தி, அந்தஸ்து, அதிகாரம், கல்வி அல்லது ஜாதி ஆகியவற்றைப் பற்றி தற்பெருமை கொள்ளாதீர்கள். உங்களது உடமைகள்,மன ஆற்றல்கள் மற்றும் புத்தி கூர்மையை இறைவனுக்கும், அவனது மஹிமைக்கும் சேவை ஆற்றுவதில் அர்ப்பணியுங்கள்.