azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 20 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 20 Apr 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

Rama is the embodiment of Dharma (Righteousness), which is the basis for the entire Universe. However deep and great our scholastic eminence or wealth may be, this birth is of no use without the transformation of the mind. Merely repeating Rama’s name is inadequate without realising the Rama Thathwa (Principle). A true human being is one who consistently practices the principle of dharma. Burning is the dharma of fire. Coolness is the dharma of ice. Fire is no fire without burning. Similarly the dharma of man lies in performing actions with the body, following the commands of the heart, deeply rooted in Divine Love. Every act performed with thought, word, and deed in harmony is an act of dharma. From today, emulate Rama in your daily life and transform yourself by following the path of Love. (Summer Showers in Brindavan 1996, Chap 2.)
Dharma and Jnana (right conduct and spiritual wisdom) are two eyes given to man to discover their uniqueness and his divinity. - Baba
ஸ்ரீ ராமர், இந்தப் பிரபஞ்சம் அனைத்திற்கும் ஆதாரமான தர்மத்தின் உருவமாவார். நமது புலமைத்திறனோ அல்லது செல்வமோ எவ்வளவு ஆழமான மற்றும் சிறந்ததாக இருந்தாலும், மனமாற்றம் இல்லை எனில், இப்பிறவியானால், எந்த விதப் பயனுமில்லை. ஸ்ரீராம தத்துவத்தை உணராமல், ஸ்ரீ ராம நாமத்தை வெறுமனே ஜெபிப்பது போதுமானதல்ல. இடையறாது தர்மத்தின் கோட்பாடுகளைக் கடைப் பிடிப்பவனே உண்மையான மனிதன். சுட்டு எரிப்பது நெருப்பின் தர்மம். குளுமை அளிப்பது பனிக்கட்டியின் தர்மம். அதைப் போலவே, தெய்வீக அன்பில் ஆழமாக நிலை கொண்டு, இதயத்தின் கட்டளைகளைப் பின்பற்றி, உடலால் செயலாற்றுவதில் தான் மனிதனின் தர்மம் உள்ளது. எண்ணம், சொல் மற்றும் செயல் என்ற மூன்றின் இசைவோடு ஆற்றப்படும் ஒவ்வொரு செயலும் தர்மச் செயலே. இன்றிலிருந்து, உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஸ்ரீ ராமரை முன்னுதாரணமாகக் கொண்டு, அன்பின் பாதையைப் பின்பற்றி, உங்களையே மாற்றிக் கொள்ளுங்கள்.
தர்மமும், ஞானமும், அவற்றின் தனித்தன்மை மற்றும் அவனது தெய்வீகத்தைக் கண்டு கொள்வதற்காக மனிதனுக்குக் கொடுக்கப் பட்டுள்ள இரண்டு கண்கள். - பாபா