azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 22 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 22 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')

One may know the 700 verses of the Bhagavad Gita by heart, but trust Me, the time that was spent in learning by rote and reciting it, is all a waste, if one does not resolutely act upon even a single verse. It is not the resolution that matters; it is resoluteness. Resolution is just a string of words. In fact, that learning might even be a handicap as that skill can affect the head and make one swell with pride. The price of sugarcane is fixed according to the sugar content in it. You evaluate oranges in proportion to the juice they contain, is it not? So too, one is worthy of honour in proportion to the knowledge of the Self acquired. This knowledge alone can confer steadiness, strength and real happiness.(Divine Discourse, Feb 19, 1964.)
Just as fire is needed till the rice is cooked, so also spiritual practices are needed till you realize your innate divinity. - Baba
ஒருவர் ஸ்ரீமத் பகவத் கீதையின் 700 ஸ்லோகங்களையும் மனப்பாடமாகத் தெரிந்து வைத்திருக்கலாம்; ஆனால் என்னைப் பொறுத்த வரையில்,அதில் ஒரு ஸ்லோகத்தையாவது,உறுதியுடன் கடைப் பிடிக்காதவரை,அதை மனப் பாடம் செய்து, உச்சாடனம் செய்வதற்காகச் செலவழிக்கப் பட்ட அத்தனை நேரமும் வீணே. தீர்மானம் செய்வது முக்கியமல்ல; மன உறுதியே பிரதானம். தீர்மானம் என்பது வெறும் ஒரு சொற்றொடரே.உண்மையில்,இப்படிப் பட்ட கல்வி ஒரு இடையூறாகக் கூட ஆகி விடலாம் ,ஏனெனில்,இந்தத் திறமை ஒருவரை தற்பெருமையினால்,தலைக் கனம் கொள்ளச் செய்ய வல்லது. கரும்பின் விலை அதில் உள்ள சர்க்கரையின் அளவைப் பொறுத்தே நிர்ணயிக்கப் படுகிறது. நீங்கள் ஆரஞ்சுப் பழங்களின் மதிப்பை,அவற்றில் உள்ள சாறுக்குத் தகுந்தவாறு கணக்கிடுகிறீர்கள் அல்லவா? அதைப் போலவே, ஒருவர் , அவர் பெற்றுள்ள ஆத்ம ஞானத்திற்குத் தகுந்தவாறே மதிக்கத் தகுந்தவர் ஆகிறார். இந்த ஞானமே,நிலைகுலையாமை,வலிமை மற்றும் உண்மையான ஆனந்தத்தை அளிக்க வல்லது.
எவ்வாறு அரிசி வேகும் வரை நெருப்பு தேவையோ, அவ்வாறே, உங்களது உள்ளார்ந்த தெய்வீகத்தை நீங்கள் உணரும் வரை ஆன்மீக சாதனைகள் தேவை - பாபா