azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 18 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 18 Jan 2013 (As it appears in 'Prasanthi Nilayam')
Take the ups and downs of life as natural. They are incidental to the world of compounds and components. When an empty plantain leaf is kept, it tends to move up in the wind and fly. But, when you serve dishes on it, the food and the leaf will remain unshaken. So too, fill your mind and heart with the virtues of faith, steady discipline, devotion, detachment and equanimity - these are items of the spiritual menu. Then you will not sink with every blow. When you have attained true wisdom, you will find that good fortune should not be gloated over, nor bad fortune grieved over. A hero treats both with equal unconcern. Pain and Gain are breezes and storms that cannot affect the depths of the ocean of bliss in the heart of a true devotee.(Divine Discourse, Oct 19, 1966.)
What is the sign of your being good? You are happy at others’ happiness; you grieve when another grieves. - Baba
வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை,இயற்கையாக ஏற்றுக் கொள்ளுங்கள். இவை உலக வாழ்க்கையின் சாதாரண நிகழ்வுகள். காலியாக ஒரு வாழை இலையை வைத்திருக்கும் போது,அது காற்றில் மேலெழுந்து பறக்க முயல்கிறது. ஆனால், அதில் பதார்த்தங்கள் பறிமாறப் பட்ட பின்,அந்த இலையும் அதில் உள்ள உணவும் அசையாமல் அங்கேயே இருக்கும்.அதைப் போலவே, உங்களது மனம் மற்றும் இதயத்தை நற்குணங்களான நம்பிக்கை, நிலையான கட்டுப்பாடு,பக்தி,பற்றின்மை மேலும் சமமான மனப்பாங்கு ஆகியவற்றால் நிரப்புங்கள் -இவையே ஆன்மீக உணவுப் பட்டியலில் உள்ள பண்டங்கள். பின்னர் நீங்கள் ஒவ்வொரு தாக்குதலின் போதும் வீழ்ச்சி அடைய மாட்டீர்கள். நீங்கள் உண்மையான ஞானம் அடைந்த பின், நல் அதிர்ஷ்டம் வந்த போது, பெருமகிழ்ச்சி அடையவோ, துரதிருஷ்டம் வரும் போது துயரம் கொள்ளவோ கூடாது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். ஒரு வீரன் இந்த இரண்டையும் சமமான பற்றின்மையோடு ஏற்றுக் கொள்வான்.துன்பம் எனும் புயலோ, இன்பம் எனும் தென்றலோ, உண்மையான பக்தனின் இதயத்தில் இருக்கும் ஆனந்த சாகரத்தின் ஆழத்தை அசைக்க முடியாது.
நீங்கள் நல்லவர் என்பதன் அடையாளம் என்ன? மற்றவர்களது மகிழ்ச்சியைக் கண்டு நீங்கள் மகிழ வேண்டும்; பிறரது துயர் கண்டு நீங்களும் துயரம் கொள்ள வேண்டும் - பாபா