azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 13 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 13 Dec 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Be steady, make a firm resolution. Do not commit one fault or take a false step and then repent. Be very intentional, faithful to your resolve, every single day. Before you act, deliberate and make a decision. That is better than taking a weak step and regretting and losing the way. In the Mahabharatha, Arjuna had the foresight to pause and think about the consequences of the war even before the battle began. So he asked Lord Krishna to advise and guide him. Hence, take every step in spiritual practice, or in your day to day affairs, only after deep deliberation and satisfying yourself that it will be for your good and well-being. Reason out, discriminate; do not rush to conclusions or be led away by mere hearsay.( Divine Discourse, Feb 11, 1964.)
நிலையாக இருங்கள்;ஒரு திடமான உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு தவறு செய்து விட்டோ அல்லது ஒரு தவறான அடி எடுத்து வைத்து விட்டோ, பின்னர் வருந்தாதீர்கள்.ஒவ்வொரு நாளும், வேண்டும் என்றே உங்கள் உறுதியில் விசுவாசமாக இருங்கள்.செயல்படும் முன்பு,நன்கு ஆலோசித்துப் பின்னர் முடிவு எடுங்கள்.பலவீனமான ஒரு அடி எடுத்து வைத்து விட்டுப் பின்னர் வருந்தி,வழி தடுமாறுவதை விட, இது மேலானது. மஹாபாரதத்தில் அர்ஜூனனுக்குப் போரைத் தொடங்கும் முன்பே,போரின் விளைவுகளைப் பற்றி நிறுத்தி, யோசிக்கும், முன் நோக்கும் திறன் இருந்தது. அதனால் தான், அவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணரை,ஆலோசனை அளித்து, வழி நடத்துமாறு வேண்டினார்.எனவே,ஆன்மீக சாதனையிலோ அல்லது அன்றாட வாழ்க்கையிலோ,ஒவ்வொரு அடியையும்,ஆழ்ந்து ஆலோசனை செய்து,அது உங்களது நன்மைக்கும்,நலனுக்கும் உகந்தது என உறுதி செய்த பின்னரே,எடுங்கள்.காரண காரியங்களை ஆராய்ந்து பகுத்தறியுங்கள்; வதந்திகளால் ஈர்க்கப்படவோ அல்லது முடிவு எடுப்பதில் அவசரப்படவோ செய்யாதீர்கள்.