azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 02 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 02 Nov 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The best means to stay in contact with the Higher Self at all times, is to follow the simple exercise of Namasmarana, the repetition of any one of the Names of the Lord; a Name that signifies the glory that lies embedded in every being. People indulge in all types of purposeless gossip, conversations and scandal. Many find time and interest in these degrading pursuits. But they have no inclination to awaken the Divine in them by constant remembrance of the Creator and His Splendour. See only those scenes that will foster this discipline; speak only of elevating and uplifting subjects; listen only to purifying topics; think and feel only pure thoughts and emotions. That is the way to develop the Divinity inherent in each one.(Sathya Sai Speaks, Vol 6, Ch 25)
Keep the name of the Lord always radiant on your tongue and mind, it will keep the tricks of the mind under control. - Baba
எல்லாக் காலங்களிலும்,அந்த பரப்ரம்மத்துடன் தொடர்பை வைத்துக் கொள்வதற்கான மிகச் சிறந்த வழி, இறைவனின் பல நாமங்களில்,ஒவ்வொரு ஜீவராசியிலும் உறையும் இறைவனது மஹிமையைக் குறிக்கும், ஏதேனும் ஒரு நாமத்தைத் திரும்பத் திரும்பக் கூறும் நாமஸ்மரைணையே. மனிதர்கள் பல தரப்பட்ட வெட்டியான வம்புப் பேச்சுகளிலும், ஸம்பாஷணைகளிலும், அவதூறுகளிலும் ஈடுபடுகிறார்கள். பலர் இப்படிப் பட்ட கீழ்த்தரமானவற்றில் ஆர்வமும்,நேரமும் செலுத்துகிறார்கள். ஆனால்,படைத்தவனையும் அவனது கீர்த்தியையும் நினைவு படுத்தும் நாமஸ்மரணையின் மூலம் அவர்களுள் உறையும் இறைவனைத் தட்டி எழுப்புவதில் நாட்டம் செலுத்துவதில்லை. இந்தக் கட்டுப்பாட்டைப் பேணும் காட்சிகளை மட்டுமே காணுங்கள்;உயர்ந்த மற்றும் மேம்பாடு அளிக்கும் விஷயங்களைப் பற்றியே பேசுங்கள்;தூய்மை அளிக்கும் தலைப்புகளைப் பற்றியே கேளுங்கள்; தூய்மையான சிந்தனைகள் மற்றும் மனக்கிளர்ச்சிகளையே ,உணர்ந்து எண்ணுங்கள். இதுவே, ஒவ்வொருவர் உள்ளும் உறையும் தெய்வீகத்தை வளர்த்துக் கொள்வதற்கான வழி.
இறைநாமத்தை உங்கள் நாவிலும்,மனதிலும் எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கச் செய்யுங்கள்; அது மனதின் சேஷ்டைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் - பாபா