azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 08 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 08 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

If your thoughts are centred around the body, you will have worries of pains and illnesses, real or imaginary. If they are centred on riches, you will be worried about profit and loss, tax and exemptions. If they roam round fame, then, you are bound to suffer from the ups and downs of scandal, calumny and jealousy. So let them centre round the seat of power and love which deserve willing submission - the Name of the Lord. Let your whole being surrender to it. Then you will be happy forever. For the sages of the Vedic culture, the Name of the Lord was the very breath; they lived on the sustenance, which contemplation of the Lord’s glory provided. God is the very embodiment of Love. He can be won only through Love.(Divine Discourse, Oct 3, 1965.)
Winning love through love is a vital aspect of devotion. - Baba
உங்கள் எண்ணங்கள் உடலைக் குறித்ததாகவே இருந்தால்,உண்மையான அல்லது கற்பனையான வலிகள் மற்றும் நோய்களைப் பற்றிய கவலைகள் உங்களைச் சூழ்ந்து கொள்ளும். அவை செல்வங்களைக் குறித்து இருந்தால், லாப, நஷ்டங்கள், வரிகள் மற்றும் வரி விலக்குகள் பற்றி நீங்கள் கவலைப் படுவீர்கள். அவை பெயர்,புகழ் ஆகியவற்றைச் சுற்றிக் கொண்டு இருந்தால், அவதூறு, வசைபாடு மற்றும் பொறாமைகளின் ஏற்ற இறக்கத்தால் அவதிப்படுவீர்கள். எனவே, அவற்றை, போற்றிப் பணிவதற்குத் தகுதியான, சக்தி மற்றும் அன்பின் உறைவிடமான, இறைநாமத்தைச் சூழ்ந்திருக்குமாறு செய்யுங்கள். உங்களது அனைத்தும் அதற்கு சரணாகதியாகட்டும். பின்னர், நீங்கள் ஸதாஸர்வகாலமும் ஆனந்தத்துடன் இருப்பீர்கள். இறைநாமமே,வேத கால முனிவர்களின் உயிர் மூச்சாக இருந்தது;இறைவனது மகிமையை தியானிப்பதால் கிடைக்கும் ஊட்டத்தைக் கொண்டு அவர்கள் வாழ்ந்தார்கள். இறைவன் அன்பின் வடிவம். அவனை அன்பால் மட்டுமே வெல்ல முடியும்.
அன்பை ,அன்பால் வெல்லுவதே பக்தியின் இன்றியமையாத அம்சமாகும்-பாபா