azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 13 Sep 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 13 Sep 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The Bhagavad Gita recommends that you bring any of these – leaf, flower, fruit or water (pathram, pushpam, phalam and thoyam) when you come to the Lord; that when going to the presence of elders and saints, one should not go empty handed. But the Lord does not want any of these. When you demand a thing, you must be prepared to pay a price, equal to its value. If you are seeking the Divine, offer something divine. Love, Peace, Righteousness and Truth are Divine. Bring Me these or any one of these and I shall most gladly accept the gift. Do not offer the Lord mere flowers that fade, fruits that rot, leaves that dry or water that evaporates.( Divine Discourse, Sep 30, 1965.)
இறைவனிடம் செல்லும் போது,ஒரு இலை ( பத்ரம்), ஒரு பூ(புஷ்பம்), ,ஒரு பழம் (ஃபலம்), சிறிது நீர் ( தோயம்), என ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும் என ஸ்ரீமத் பகவத் கீதை பரிந்துரைக்கிறது; அதாவது பெரியவர்கள் மற்றும் ஆன்றோர்களின் முன்னிலையில் வெறும் கைகளுடன் செல்லக்கூடாது எனப் பொருள். ஆனால்,இறைவன் இதை எல்லாம் வேண்டுவதில்லை. நீங்கள் எதையாவது கோரும்போது,அதன் மதிப்பிற்குத் தகுந்த விலையைக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் தெய்வத்தை வேண்டினால், தெய்வீகமானவற்றை அர்ப்பணம் செய்யுங்கள். சத்தியம்,தர்மம்,சாந்தி மற்றும் ப்ரேமை ஆகியவையே தெய்வீகமானவை. இவற்றையோ அல்லது இவற்றில் ஒன்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்; அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன். வெறும் வாடிவிடும் மலர்களையோ,அழுகி விடும் பழங்களையோ, உலர்ந்து விடும் இலைகளையோ, வற்றி விடும் நீரையோ இறைவனுக்கு அர்ப்பணிக்காதீர்கள்.