azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 30 Aug 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 30 Aug 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Illness is caused more by malnutrition of the mind than of the body. As doctors speak of vitamin deficiency, I will present the root-cause in similar lines as ‘Deficiency of Vitamin G’. To cure this, I will recommend the repetition of any Name of God, along with contemplation of His Glory and Grace of God. That is the medicine to overcome the Vitamin G deficiency. Regulated life and habits are two-thirds of the treatment while medicine contributes to one-third. Every one of you must reveal the qualities of love, humility, detachment and contentment through all your actions. When your mind is unattached to the ups and downs of life, but is able to maintain equanimity under all circumstances, your physical health will be excellent.(Divine Discourse, Sep 27 1965.)
மனதின் குறை ஊட்டத்தால் வியாதிகள் அதிகமாக ஏற்படுகின்றனவே அன்றி உடலின் ஊட்டக் குறைவால் அல்ல. மருத்துவர்கள் வைட்டமின் குறைவைப் பற்றிப் பேசுகிறார்கள்; அதே விதத்தில் அடிப்படைக் காரணத்தை,'' வைட்டமின் '' ஜி'' ( GOD ) யின் குறைபாடு '' என்பேன். இதைச் சரி செய்ய, இறைவனது எந்த நாமத்தையாவது ஸ்மரணை செய்வதையும், அதனுடன் கூடவே அவனது பெருமை மற்றும் கருணையை தியானிப்பதையும் செய்வதைப் பரிந்துரைக்கிறேன். இதுவே ' வைட்டமின் '' ஜி'' ( GOD ) யின் குறைபாட்டைச் சரி செய்வதற்கான மருந்து. மருந்துகள் மூன்றில் ஒரு பங்கு பலனளிக்கும் என்றால், முறையான வாழ்க்கையும், பழக்கங்களும் மூன்றில் இரண்டு பங்கு மருத்துவம் ஆகும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது செயல்களின் மூலம் அன்பு, பணிவு, பற்றுதலின்மை மற்றும் திருப்தி என்ற குணங்களை வெளிப்படுத்த வேண்டும். எப்போது உங்கள் மனம் வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளில் பற்றின்றி, எல்லா சூழ்நிலைகளிலும் சமநிலையைக் கடைப்பிடிக்கிறதோ, உங்களது உடல் ஆரோக்கியம் உன்னதமாக இருக்கும்.