azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 26 Aug 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 26 Aug 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

In the Geetha, Krishna said to Arjuna, “I am the witness; through Me, this conglomeration of the five elements called Universe, all these moveable and immoveable objects, are formed. Whatever the name or form worshiped, I am the Recipient; for I am the Goal of all. I am the only One. There is no Other. I Myself become the Worshipped, through My many Names and Forms. Not only this, I am the Fruit of all actions, the Bestower of the Fruit, and the Prompter. To realise Me is indeed liberation. He is the Jivanmuktha (liberated even while alive) who attains that realisation. Arjuna, if one yearns to become a Jivanmuktha, one has to eradicate fully the attachment to the body.”(Geetha Vahini, Ch 18.)
ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜூனனிடம்,'' நானே சாக்ஷி பூதமாக இருக்கிறேன்; பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆன இந்த பிரபஞ்சம் மற்றும் அனைத்து அசையும் மற்றும் அசையாப் பொருட்களும் என் மூலமே தோன்றியுள்ளன. எந்த நாம அல்லது ரூபத்தை வழிபட்டாலும், அதைப் பெறுபவன் நானே.; ஏனெனில் அனைத்தின் இலக்கும் நானே. நான் ஒன்றே அன்றி வேறில்லை. எனது பல நாம , ரூபங்களின் மூலம் நானே வழிபடுபவராக ஆகி உள்ளேன்.இது மட்டுமல்ல, அனைத்து செயல்களின் பலனும் நானே, பலன்களை அளிப்பவனும் நானே; தூண்டுபவனும் நானே. என்னை உணர்வதே முக்தியாகும். உயிர் வாழும்போதே இந்த உணர்வைப் பெறுபவரே ''ஜீவன் முக்தர்'' ஆவார். அர்ஜூனா ! ஒருவர் ''ஜீவன் முக்தர்'' ஆக விழைந்தால்,உடல் மீது கொண்டுள்ள பற்றை முற்றிலுமாக நீக்க வேண்டும்.'' எனக் கூறினார்.